தூத்துக்குடிக்கு சப்கலெக்ட்ராகும் பிரபல நடிகரின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்
இந்தியஆட்சிப்பணித் தேர்வில் தேசிய அளவில் 75வது இடம்பிடித்து சாதனை படைத்த ஸ்ருதன் ஜெய் நாராயணன், தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பிரபல காமெடி நடிகரான சின்னி ஜெய்ந்த் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி மற்றும் கமலுக்கு நெருக்கமானவர் பிரபல காமெடி நடிகர் சின்னிஜெயந்த். சிறந்த மிமிக்ரி கலைஞரான இவர் பல நூறு திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

1980களில் கதாநாயகர்களின் நண்பர்களில் நிச்சயம் சின்னிஜெயந்த் கண்டிப்பாக இருப்பார். அதேவேளையில் நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லத்தனம் என மற்ற வேடங்களிலும் கலக்கியவர்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஆட்சிப் பணித்தேர்வில் தேசிய அளவில் 75-வது ரேங்க் பெற்று சாதனை படைத்திருந்த ஸ்ருதன், தூத்துக்குடி உதவி மாவட்ட ஆட்சியர் பயிற்சியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தி வெளியில் பரவியதை அடுத்து அனைவரும் சின்னி ஜெயந்த்திற்கும் அவரது மகனுக்கும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அந்த வாழ்த்து மழையில் நனைந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார் சின்னி ஜெயந்த் .
தங்கள் மகன்களை சொந்த செலவிலாவது படம் எடுத்து நாயகனாக்க முயற்சி செய்யும் பிரபல நடிகர்கள் மத்தியில், தனது மகனை ஐஏஎஸ் ஆக்கிய சின்னிஜெயந்த் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவரே.
உங்கள் கருத்தை பதிவிடுக