கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்
நியூசிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 63 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அக்சர் பட்டேல் 5வது முறையாக 5 விக்கெட் வீழ்த்திய சாதனை படைத்தார்.
கான்பூரில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அக்சர் பட்டேலின் சிறப்பான சுழலில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஆட்ட நேர முடிவில் இந்தியா 14 ரன்களுக்கு சுப்மன் கில்லின் விக்கெட்டை பறிகொடுத்தது.
தனது நான்காவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அக்சர் பட்டேல் டெஸ்ட் போட்டிகளில் 5வது முறையாக 5 விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் விக்கெட் இழப்பின்றி 151 ரன் என்ற நிலையில் இருந்த நியூசிலாந்து 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி தொடர்ந்து நிதானமாக ஆடியது. சிறப்பான விளையாடி முதல் விக்கெட்டிற்கு 151 ரன்கள் சேர்த்த நிலையில் நியூசிலாந்து அணியின் வில்யங் 89 ரன்களில், அஸ்வின் பந்துவீச்சில் மாற்று விக்கெட் கீப்பராக வந்த கே.எஸ்.பரத்தின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். நடுவரின் முடிவை எதிர்த்து முறையீடு செய்து ஒருவழியாக 67 வது ஓவரில் இந்த பார்னர்ஷிப்பை உடைத்து இந்தியா, மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது.
அதன் பிறகு,மூன்றாவது வீரராக களமிறங்கிய வில்லியம்சனை உணவு இடைவேளைக்கு முன்பாக உமேஸ்யாதவ் எல்.பி.டபிள்யு முறையில் வீழ்த்த இந்திய அணி நிம்மதி பெருமூச்சு விட்டது. அப்போது நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 86 ஓவர்களில் 197.
உணவு இடைவேளைக்குப் பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணிமேல் அக்சர் பட்டேல் தொடர்ந்து ஆதிக்கம் செய்யத் தொடங்கினார். இரண்டாவது செஷனில் அனுபவம் வாய்ந்த ரோஸ் டெய்லரை வீழ்த்தி இந்தியாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அக்சர் பட்டேலின் பந்தில் கடினமான ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்ட கே.எஸ்.பரத், இம்முறை சிறப்பான கேட்சைப் பிடித்து டெய்லரை 11 ரன்களில் வெளியேற்றினார்.
அடுத்த வந்த ஹென்றி நிக்கோலஸையும் எல்பிடள்யூ முறையில் 2 ரன்களில் அக்சர் பட்டேல் வீழ்த்த நியூசிலாந்து அணி தடுமாறத் தொடங்கியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த அழுத்தத்தில், சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த டாம் லேதம் அக்சர் பட்டேலின் சாதுர்யத்தில், பரத்தின் சிறப்பான ஸ்டம்பிங்கால் 95 ரன்களுக்கு வெளியேறினார். டாம் லேதம் மூன்று முறை அம்பயரின் தவறான முடிவுகளை மேல்முறையீடு செய்து தப்பியது குறிப்பிடத்தக்கது.
அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ராச்சின் ரவீந்திரா துடிப்பாகத் தொடங்கினாலும், ஜடேஜாவின் சுழலில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். மறுபுறம் டாம் ப்ளண்டல், டிம் சவுத்தி விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் தடுமாறிய நிலையில் கைல் ஜேமிசனின் 23 ரன்கள் கைகொடுக்க, 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சிறப்பாக விளையாடிய லேதம் 95 ரன்கள் மற்றும் வில் யங் 89 ரன்கள் எடுத்தனர்.
கழுத்தில் காயம் ஏற்பட்ட சாகாவிற்கு பதிலாக விக்கெட் கீப்பராக களமிறங்கிய கே.எஸ்.பரத் இரண்டு அருமையான கேட்ச் மற்றும் சிறப்பான ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.
49 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியாவிற்கு ஆரம்பமே அதிர்ச்சியாய் இருந்தது. சுப்மன் கில் 1 ரன்னில் ஜேமிசன் பந்து வீச்சில் தனது ஸ்டம்புகளை பறிகொடுத்தார். இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்த போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்திய ஜேமிசன் 50 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 9 டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ள 18 இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு முன்பாக டர்னர் (6), பிலாண்டர்(7) ஆகியோர் குறைந்த போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். நியூசிலாந்து அணிக்காக வேகமாக 50 விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
குறைந்த பந்துகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகள் (20ஆம் நூற்றாண்டிலிருந்து)
1240 வெர்னான் பிலாண்டர்
1844 பிரட் லீ
1865 கைல் ஜேமிசன்
1880 பிராங்க் டைசன்
1943 ஷேன் பாண்ட்
முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்:
6 சார்லி டர்னர்
5 டாம் ரிச்சர்ட்சன்/ ரோட்னி ஹாக்/ அக்சர் படேல்
4 ஃப்ரெட் ஸ்போஃபோர்ட் / சிட் பார்ன்ஸ் / நிக் குக் / வெர்னான் பிலாண்டர்
சுருக்கமான ஸ்கோர்கள்:இந்தியா 345 (ஸ்ரேயாஸ் ஐயர் 105, ஷுப்மான் கில் 52, ரவீந்திர ஜடேஜா 50; டிம் சவுத்தி 5-69) மற்றும் 14/1 (கைல் ஜேமிசன் 1-8) நியூசிலாந்து ம296 (டாம் லாதம் 95, வில் யங் பாட் 895 62)
தற்போதைய நிலை : இந்தியா 63 ரன்கள் முன்னிலை
உங்கள் கருத்தை பதிவிடுக