Nigazhvu News
23 Nov 2024 3:47 AM IST

Breaking News

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

Copied!
Nigazhvu News

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு 

மும்பையில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் ஒரே இன்னிங்ஸில்  10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.  மாயங்க் அகர்வால் (150ரன்) மற்றும் அக்சர் பட்டேல் (52 ரன்) உதவியுடன் இந்தியா 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன் என்ற ஸ்கோருடன் ஆட்டத்தை தொடர்ந்த இந்தியா,  சாகா மற்றும் அஸ்வின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்தது. அதன் பின் ஜோடி சேர்ந்த மாயங்க் அகர்வால் மற்றும் அக்சர்  ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்த்தது. முதல் செஷனில் 60 ரன்களுக்கு மேல்  எடுத்த இந்த ஜோடி, மேலும்  விக்கெட்டுகளை  இழக்காமல் பார்த்துக் கொண்டது. 

இரண்டாவது செசனில், அட்டகாசமான ஸ்கொயர் கட். பவுண்ட்ரியுடன் 150 ரன்கள் எடுத்த அகர்வால், அடுத்த பந்திலியே கீப்பர் பிலெண்டலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுபுறம் தனது முதல் அரைசதத்தை எடுத்த அக்சர் பட்டேலும் வெளியேற அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டானது. 


சிறப்பாக பந்து வீசிய அஜாஜ் பட்டேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.  ஜிம் லேகர் மற்றும் அனில் கும்ப்ளேக்குப் பிறகு 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் அஜாஜ் பட்டேல் ஆவார். முதல் இன்னிங்சில் 10 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.


பின்னர் ஆடத்துவங்கிய நியூசிலாந்து அணி சிராஜ்ஜின்  வேகத்தில் நிலை குலைந்தது.  சிராஜ் பந்தில் வில் யங் 4 ரன்களில் கேப்டன் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, மறுபுறத்தில் பவுன்சரில் டாம் லேதம் ஸ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த டெய்லரையும் போல்டாக்கி, நூலிழையில் ஹாட்ரிக் வாய்ப்பை இழந்தார் முகமது சிராஜ். 

மிட்செல் (8), நிக்கோலஸ் (7), ரவீந்திரா(4) என அக்சர், அஸ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ்வின் சுழலில் அவுட் ஆக 38 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.  ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தது‌. இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

பாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்திருந்தது.  அகர்வால் 38 ரன்களுடனும், புஜாரா 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பீல்டிங்கின் போது காயமடைந்த சுப்மன கில் பேட்டிங் செய்ய வராததால், புஜாரா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். இந்திய அணி 332 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

சுருக்கமான ஸ்கோர் : இந்தியா 325 ( மாயங்க் அகர்வால் 150, அக்சர் 52,  அஜாஜ் பட்டேல் 10-119 ) & 69-0 ( மாயங்க் 38*, புஜாரா 29*)

நியூசிலாந்து 68 (ஜேமிசன் 17,  அஸ்வின் 4-8 , சிராஜ் 3-19)  


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

மும்பை டெஸ்ட்: இந்தியா அணி சாதனை வெற்றி - 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மும்பை டெஸ்ட்: இந்தியா அணி சாதனை வெற்றி - 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்

மித்ரன்

இந்தியா- நியூசிலாந்து முதல் டெஸ்ட்: ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா அரைசதத்தில் தலை நிமிர்ந்தது இந்தியா - ஆட்டநேர முடிவில் 258-4