இந்தியா அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் | காயமடைந்த ரோஹித்துக்குப் பதிலாக பிரியங் பஞ்சால் டெஸ்ட்டில் சேர்ப்பு - ஒருநாள் தொடரிலிருந்து கோஹ்லி விலகல்
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை பயிற்சியின் போது இடது தொடையின் தசையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இந்திய டெஸ்ட் துணை கேப்டன் ரோஹித் சர்மா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ரோஹித்துக்கு பதிலாக பிரியங்க் பஞ்சால் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி, ரோஹித்தின் காயத்தின் தன்மை பற்றி விவரங்கள் வெளியிடப்படவில்லை. டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய ரோகித்தின் காயத்தின் தன்மையைப் பொறுத்தே, ஒருநாள் தொடரில் இடம்பெறுவாரா? மாட்டாரா என்பது முடிவெடுக்கப்படும்.
சமீபத்தில் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் விராட் கோஹ்லி தென் ஆப்பரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். தனது மகள் வாமிகாவின் முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக, ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
50 ஓவர் உலகக்கோப்பை வரை கேப்டனாகத் தொடர விராட் கோஹ்லி விரும்பிய நிலையில், ரோகித் சர்மா டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், சதீஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, பிரியங்க் பஞ்சால், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (வி.கீ),விருத்திமான் சாஹா (வி.கீ), ஆர். அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது சிராஜ்.
டெஸ்ட் அட்டவணை
முதல் டெஸ்ட்: டிசம்பர் 26 முதல் 30 வரை, செஞ்சுரியன் (பிற்பகல் 1.30 மணி IST).
இரண்டாவது டெஸ்ட்: ஜன. 3 முதல் 7 வரை, ஜோகன்னஸ்பர்க் (மதியம் 1.30 மணி).
மூன்றாவது டெஸ்ட்: ஜனவரி 11 முதல் 15 வரை, கேப்டவுன் (மதியம் 2 மணி).
உங்கள் கருத்தை பதிவிடுக