Nigazhvu News
23 Nov 2024 3:57 AM IST

Breaking News

விஜய் ஹசாரே காலிறுதி : ஜெகதீசன், ஷாருக்கான் அதிரடியில் அரையிறுதியில் நுழைந்தது தமிழ்நாடு - உ.பியை வீழ்த்தி ஹிமாச்சல் அரையிறுதிக்கு தகுதி

Copied!
Nigazhvu News

விஜய் ஹசாரே காலிறுதி : ஜெகதீசன், ஷாருக்கான் அதிரடியில் அரையிறுதியில் நுழைந்தது தமிழ்நாடு உ.பியை வீழ்த்தி ஹிமாச்சல் அரையிறுதிக்கு தகுதி

விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டித் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாடு, ஹிமாச்சல் பிரதேச அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.  இன்று நடைபெற்ற முதலிரண்டு காலிறுதி ஆட்டங்களில்,  தமிழ்நாடு அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகாவையும், ஹிமாச்சல் 5 விக்கெட் வித்தியாசத்தில் உத்திரபிரதேச அணியையும் வென்றது.‌

தமிழ்நாடு vs கர்நாடகா:
என் ஜெகதீஷனின் சதம் மற்றும் ஷாருக் கானின் அட்டகாசமான அதிரடியால் கர்நாடகாவை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தமிழகம்  2021-22 விஜய் ஹசாரே டிராபியின் அரையிறுதிக்கு   தகுதி பெற்றுள்ளது.‌

கர்நாடகா கேப்டன்‌ மனீஷ் பாண்டே டாஸ் வென்று, தமிழக அணியை பேட்டிங் செய்ய பணித்தார். பாபா அபராஜித்தை ஆரம்பத்தில் இழந்ததாலும், தமிழ்நாடு அதன்பிறகு தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டது

25 வயதான ஜெகதீஷன் தனது மூன்றாவது லிஸ்ட் ஏ சதத்துடன் 102 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 101 ரன்கள் எடுத்தார். அவர் ஆர் சாய் கிஷோருடன் 147 ரன்களும், தினேஷ் கார்த்திக்குடன் 58 ரன்களும் பாட்னர்ஷிப்பாக எடுத்தார். 3-வது இடத்தில் களமிறங்கிய சாய் கிஷோர், 71 பந்துகளில் 61 ரன்கள் எடுத்ததன் மூலம், உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை எடுத்து தன்மீதான நம்பிக்கையை நிரூபித்தார்.

ஆனால் 36 ஓவர்களில்  2 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த தமிழ்நாடு, அடுத்த 5 ஓவர்கள் இடைவெளியில் ஜெகதீஷன், கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுக்க, ஆட்டம் கர்நாடகாவின் பக்கம் திரும்பியது.

இருப்பினும் அடுத்து ஜோடி சேர்ந்த ஷாருக்கான் மற்றும் இந்திரஜித் ஜோடி பொறுப்பாக ஆடி ரன் சேர்த்தது. ஆனால் 31 ரன்களில் வெளியேறிய இந்திரஜித்துடன், சுந்தர் மற்றும் சித்தார்த் அடுத்தடுத்து அவுட் ஆக 46 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்களுடன் தடுமாறியது.

ஆனால் தனியொருவனாக, நம்பிக்கையுடன் விளையாடி அதிரடியில் மிரட்டிய ஷாருக்கான், 39 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார். ஷாருக்கான் கடைசி நான்கு ஓவர்களில் 50 ரன்கள் குவிக்க, தமிழ்நாடு 8 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்தது.

இலக்கை துரத்த களமகறங்கிய வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட கர்நாடகா அணியின் தேவ்தத் பாடிகல் இரண்டாவது பந்தில் டக் ஆக, கர்நாடகாவின் முயற்சி ஆரம்பத்திலேயே தோல்வியடைந்தது,

ரோஹன் கடம் மற்றும் கே சித்தார்த்தின் இணை 59 ரன்கள் எடுத்தே நம்பிக்கை அளித்தாலும், அது போதுமானதாக இல்லை.  இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தவுடன்,  கர்நாடகா  சரிவை நோக்கி சென்றது.  இருவரையும் பிரித்த ஆர் சிலயம்பரசன்,  நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். , அதே நேரத்தில் வாஷிங்டன் சுந்தர்  மூன்று விக்கெட்டுகளை எடுத்து கர்நாடகா இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டு வந்தார்.

விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டித் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாடு, ஹிமாச்சல் பிரதேச அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.  இன்று நடைபெற்ற முதலிரண்டு காலிறுதி ஆட்டங்களில்,  தமிழ்நாடு அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகாவையும், ஹிமாச்சல் 5 விக்கெட் வித்தியாசத்தில் உத்திரபிரதேச அணியையும் வென்றது.‌
பிரசாந்த் சோப்ரா தனது ஏழாவது லிஸ்ட் ஏ சதத்தை ஒரு ரன் வித்தியாசத்தில் தவறவிட்டாலும், உத்தரபிரதேச அணிக்கு எதிராக ஹிமாச்சல் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் சவாலான பேட்டிங் பிட்ச்சில் ஹிமாச்சல் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு, அவரது 99 இன்னிங்ஸ் முக்கியமாக அமைந்தது.

பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட உத்தரபிரதேசத்தின் முதல் நான்கு பேரில் மூன்று விக்கெட்டுகளை  வினய் கலெட்டியா வீழ்த்த, உ.பி அணி 15வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்து தடுமாறியது‌

இருப்பினும், ரிங்கு சிங் உத்தரபிரதேச இன்னிங்ஸிற்கு மீண்டும் உயிர்ப்பித்தார். அக்ஷ்தீப் நாத்துடன் 64 மற்றும் புவனேஷ்வர் குமாருடன் 75 என தனது அணியை மீட்கப் போராடினார்.

அவரது 76 ரன்கள் உதவியுடன் உத்தரபிரதேசத்தை 9 விக்கெட்டுக்கு 207 ரன்கள் எடுக்க உதவியது. புவனேஸ்வர் குமார் 46 ரன்களும், அக்ஷ்தீப்  32 ரன்கள் எடுத்தனர்.

208 ரன்கள் என்ற‌ இலக்குடன்  களமிறங்கிய ஹிமாச்சல் அணிக்கு
உத்தரபிரதேசத்தின் புதிய பந்து ஜோடி - புவனேஷ்வர் மற்றும் யஷ் தயாள் - ஹிமாச்சல் பெரும் சவாலைக் கொடுத்தது.
ஷுப்னம் அரோரா 19 ரன்களில் ஆட்டமிழந்தாலும்,, பிரசாந்த் சோப்ரா மற்றும் நிகில் கங்டா ஆகியோர் விக்கெட்டை பறிகொடுக்காமல் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர்

ஸ்கோர் 38வது ஓவரில் 176 என்று இருந்த போது, அங்கித் ராஜ்பூத் நிகில் மற்றும் ரிஷி தவானை அடுத்தடுத்து வெளியேற்றினார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பிரஷாந்த் சோப்ரா சதமடிக்கும் நேரத்தில் 99 ரன்களில் சிவம் மாவி பந்தில் அவுட் ஆனார். அத்தோடு அடுத்து வந்த சுமித் வெர்மாவையும் வெளியேற்றினாலும், ஹிமாச்சல் அணி  வெற்றியைத் தடுக்க முடியவில்லை.

45.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்ற ஹிமாச்சல் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

நாளை நடைபெறும் அடுத்த இரண்டு காலிறுதி ஆட்டங்களில், சர்வீசஸ் கேரளா அணியையும், சௌராஷ்டிரா விதர்பா அணியையும் எதிர்த்து விளையாட உள்ளன.

இரண்டு முறை அடித்தார் ஆனால் அதற்குள் உத்தரபிரதேச அணிக்கு ஆட்டம் நழுவிவிட்டது.ஷிவம் மாவி அதைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு வேலைநிறுத்தங்கள் செய்தார், ஆனால் அது ஹிமாச்சலின் துரத்தலைத் தடுக்கவில்லை.
  


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

விஜய் ஹசாரே டிராபி : தமிழ்நாடு, ஹிமாச்சல், சௌராஷ்டிரா, சர்வீசஸ் காலிறுதிக்கு தகுதி | ருத்துராஜ் 4 சதங்கள் அடித்தும் மகாராஷ்டிரா வெளியேற்றம்

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்

மித்ரன்

இந்தியா- நியூசிலாந்து முதல் டெஸ்ட்: ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா அரைசதத்தில் தலை நிமிர்ந்தது இந்தியா - ஆட்டநேர முடிவில் 258-4