Nigazhvu News
23 Nov 2024 8:03 AM IST

Breaking News

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

Copied!
Nigazhvu News

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

நியூசிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் 284 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. நியூசிலாந்து அணி  ஆட்டநேர முடிவில் 4 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.

1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள், ஜேமிசன் மற்றும் சவுத்தியின் பந்துவீச்சில்  மளமளவென சரியத் துவங்கியது.

புஜாரா (22), ரஹானே (4),  மாயங்க் (17), ஜடேஜா (0) என பேட்ஸ்மேன்ஸ் வெளியேற இந்திய அணி 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

களத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த அஸ்வின்  நம்பிக்கையுடன் ஆடத்துவங்க, இந்திய அணி மெதுவாக சரியான பாதைக்கு திரும்பத்தொடங்கியது. ஆறாவது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்த இந்த ஜோடி, ஸ்கோர் 103 ரன்களை எட்டியபோது சிறப்பாக ஆடிய அஸ்வின் 32 ரன்களுக்கு ஜேமிசன் பந்தில் துரதிஷ்டவசமாக போல்ட்டாகி வெளியேற, இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியானது‌.

கழுத்து வலியின் காரணமாக பீல்டிங் செய்யாத சாகா, இக்கட்டான நிலையில் பேட்டிங் செய்ய வந்ததோடு,  ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவைக் கரைசேர்த்தார். இருவரும் இணைந்து 7 விக்கெட்டுக்கு  64 ரன்கள் சேர்த்தனர்.

முதல் இன்னிங்சில் சதமடித்த ஸ்ரேயாஸ் ஐயர், இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் முதல் போட்டியிலேயே சதம் மற்றும் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அறிமுகப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் 50+ அடித்தவர்கள்:
தில்வார் ஹூசைன்  59 & 57 எதிர் இங்கி @ கொல்கத்தா 1933-34
சுனில் கவாஸ்கர். 65 & 67* எதிர்  வெ.இ போர்ட்-ஆப்-ஸ்பெயின் 1970-71
ஸ்ரேயாஸ் ஐயர் 105 & 65 எதிர் நியூசி கான்பூர் 2021-22

சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயரும் துரதிஷ்டவசமாக, 65 ரன்களில்  சவுத்தி பந்துவீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆனாலும் அக்சர் பட்டேல்- விரித்திமான் சாகா ஜோடி பொறுப்பாக விளையாடி இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தியது.
சாகா நீண்ட நாட்களுக்குப் பிறகு அரைசதம் அடித்தார்.  அக்சர் பட்டேல் (28), மற்றும் சாகா (61) இணைந்து 8 விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 234  ரன்களுடன் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

இந்தியா இரண்டாவது  முறையாக 6,7 மற்றும் 8 வது விக்கெட்டிற்கு 50+ ரன்கள் சேர்த்து சாதனை படைத்தது. இதற்கு முன்பு 2007ல் டிராவிட் கேப்டனாக இருந்து போது, இங்கிலாந்திற்கு எதிராக ஆட்டத்தில்  முதன்முறையாக இந்த சாதனையைச் செய்தது குறிப்பிடத்தக்கது.

284 ரன்களை இலக்காக கொண்டு இறங்கிய நியூசிலாந்து அணியின் யங் 2 ரன்களில் அஸ்வின் பந்தில் எல்‌.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க, அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்களுடன் நான்காவது நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.

கடைசி நாளில் 280 ரன்கள் மீதமிருக்க, நியூசிலாந்தின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய நாளை களமிறங்குமென்பதால், கடைசி நாள் ஆட்டம் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

சுருக்கமான ஸ்கோர்:
இந்தியா 345 (ஸ்ரேயாஸ் ஐயர் 105, டிம் சவுத்தி 5-69) மற்றும் 234/7( ஸ்ரேயாஸ் 65, கைல் ஜேமிசன் 3-40) நியூசிலாந்து 296 (டாம் லாதம் 95,  அக்சர் 5-62) மற்றும் 4-1 ( அஸ்வின் 1-3) 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மும்பை டெஸ்ட்: இந்தியா அணி சாதனை வெற்றி - 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா

மித்ரன்

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்

மித்ரன்

இந்தியா- நியூசிலாந்து முதல் டெஸ்ட்: ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா அரைசதத்தில் தலை நிமிர்ந்தது இந்தியா - ஆட்டநேர முடிவில் 258-4