Nigazhvu News
23 Nov 2024 3:54 AM IST

Breaking News

விஜய் ஹசாரே டிராபி: ஹாட்ரிக் சதமடித்த "ருத்து", அதிரடி காட்டும் வெங்கடேஷ், ஷாருக்

Copied!
Nigazhvu News

ருத்துராஜ் கெய்க்வாட் ஹாட்ரிக் சதமடித்து அசத்த, வெங்கடேஷ், ஷாருக்கான் அதிரடியில் கலக்க சூடுபிடித்துள்ளது விஜய் ஹசாரே டிராபி. தமிழக அணி அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் வென்று, மூன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில்  முன்னிலை வகிக்கிறது. 

மாநிலங்களுக்கு இடையிலான உள்ளூர் 50 ஓவர் விஜய் ஹசாரே டிராபி போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. 6 பிரிவுகளாகப் பிரித்து இந்தியாவின் திருவனந்தபுரம், ராஜ்கோட், ராஞ்சி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.‌

இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு இன்று மூன்றாவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

மேற்கு வங்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய தமிழக அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய தமிழக அணி 50 ஓவர்கள் முடிவில் 295 ரன்கள் குவித்தது. இந்திரஜித் (64), கார்த்திக் (87) மற்றும்  கௌசிக் 31 பந்துகளில் 51  ரன்கள் எடுத்தனர். கடைசிக் கட்டத்தில் ஷாருக்கான் 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். 

பின்னர் களமிறங்கிய பெங்கால் அணி குறிப்பிட்ட இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழக அணியின் சிலம்பரசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இன்றைய பேட்டிங் நட்சத்திரங்கள்:  

ருதுராஜ் கெய்க்வாட் அடித்த 3வது சதம் மகாராஷ்டிர அணிக்கு தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்ய போதுமானதாக இல்லை. தொடக்க ஆட்டக்காரரான ருத்துராஜ் 129 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார், ராகுல் திரிபாதியின் 99 ரன்களின் உதவியுடன், மகாராஷ்டிரா 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்தது.

இலக்கை துரத்திய கேரளா 6 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது, ஆனால் விஷ்ணு வினோத் 82 பந்தில் 100 ரன்களும், சிஜோமோன் ஜோசப்பின் 70 ரன்களில் 71 ரன்களும் எடுத்தனர்.இந்த ஜோடி ஆட்டமிழக்காமல் 174 ரன்கள் குவித்து கேரளாவுக்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தந்தது.

ஹர்விக் தேசாய் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு எதிராக சவுராஷ்டிரா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவர் 108 பந்துகளில் 101 ரன்கள் குவிக்க, அந்த அணி 39 ஓவர்களில் 221 ரன்களை எட்டி வெற்றி பெற்றது 

ஆர்யன் ஜுயல் (120 நாட் அவுட்), மாதவ் கௌஷிக் (89) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் உ.பி  டெல்லியை வீழ்த்தியது  அவர்கள் 35 ஓவர்களில் 184 ரன்களை எடுத்தனர். 

சஞ்சீத் தேசாய் (106), ஹர்பிரீத் சிங் (113) ஆகிய இருவரும் சதமடிக்க,  சத்தீஸ்கர் 44 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகரை வீழ்த்தியது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவிக்க, சத்தீஸ்கர் 4 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்தது.

அர்ஷ்தீப் சிங் மற்றும் மயங்க் மார்கண்டே ஆகியோர் பந்தில் சிறப்பாக செயல்பட்ட பிறகு, பிரப்சிம்ரன் சிங் 55 பந்தில் 73 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை அசாம் அணிக்கு எதிராக பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பவுலிங் நட்சத்திரங்கள் : 

ராகுல் சிங் 10-4-13-2 என்ற வியக்கத்தக்க அசத்த தகோவாவை 40.1 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இருப்பினும், சேசிங்கில் போராடி சர்வீசஸ் வெற்றி பெறறது.  இறுதியில் புல்கித் நரங் ஆட்டமிழக்காமல் 67 ரன்களுடன் ஆறு ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தந்தார்.

பிரவீன் துபே தனது பத்து ஓவர்களில் 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, மும்பையை 9 விக்கெட்டுக்கு 208 ரன்களுக்கு வைத்திருக்க, கர்நாடகா  வெற்றியை பதிவு செய்தது.மும்பை ஒரு கட்டத்தில் 1 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது, ஆனால் துபே சூர்யகுமார் யாதவின் விக்கெட் வீழ்த்தி  சரிவைத் தொடங்கி வைத்தார். ஆர் சமர்த் ஆட்டமிழக்காமல் 96 ரன்களுடன் கர்நாடகாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அபிஷேக் ரவுத் 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்த ,  விதர்பா தோல்வியில் தள்ளியது ஒடிஷா.  42 ஓவர்களில் 148 ரன்களை சேஸ் செய்து ஒடிஷா 6 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பாவை வென்றது.

நஃபீஸ் சித்திக் 39 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்த, மணிப்பூரை 111 ரன்கள் வித்தியாசத்தில் மேகாலயாவை வீழ்த்தியது. 258 ரன்களை துரத்திய மணிப்பூர் அணி 49.2 ஓவரில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

துருவ் படேல் புதுச்சேரியை 4-2-4-3 என்று தடுமாறச் செய்ய, 27 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லுக்மான் மேரிவாலாவும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பரோடா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆல்ரவுண்ட்  நட்சத்திரங்கள் : 

வெங்கடேஷ் ஐயர் தொடர்ந்து ஆல்-ரவுண்ட்டராக அசத்த, மத்தியப் பிரதேசம் உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐயர் 49 பந்தில் 71 ரன்களை விளாசினார், மத்தியப்பிரதேசம்  7 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது. அபிஷேக் பண்டாரி 106 ரன்கள் எடுத்தார், சுபம் சர்மா 70 ரன்கள் எடுத்தார்.அதைத் தொடர்ந்து பந்து வீசிய வெங்கடேஷ்  10-0-58-2 என்ற அசத்தினார். 75 ரன்கள் எடுத்திருந்த டிக்ஷான்ஷு நேகியின் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.

மும்பையில், ரிஷி தவான் 36 பந்தில் 57 ரன்கள் எடுத்து முதலில் ஹிமாச்சலப் பிரதேசத்தை 9 விக்கெட்டுக்கு 310 ரன்களுக்கு உயர்த்தினார், பின்னர் குஜராத்தை 97 ரன்களில் வீழ்த்தியபோது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இந்தியா அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் | காயமடைந்த ரோஹித்துக்குப் பதிலாக பிரியங் பஞ்சால் டெஸ்ட்டில் சேர்ப்பு - ஒருநாள் தொடரிலிருந்து கோஹ்லி விலகல்

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு : காயத்தால் ஜடேஜா, அக்சர்,கில் நீக்கம் - ஓடிஐக்கும் ரோகித் கேப்டனாக நியமனம்

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்

மித்ரன்

இந்தியா- நியூசிலாந்து முதல் டெஸ்ட்: ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா அரைசதத்தில் தலை நிமிர்ந்தது இந்தியா - ஆட்டநேர முடிவில் 258-4