Nigazhvu News
23 Nov 2024 3:44 AM IST

Breaking News

மும்பை டெஸ்ட்: இந்தியா அணி சாதனை வெற்றி - 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா

Copied!
Nigazhvu News

மும்பை டெஸ்ட்:   இந்தியா அணி சாதனை வெற்றி - 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா 

நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, 1-0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. இதன் மூலம் உலக டெஸ்ட் தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஜெயந்த் யாதவ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் நான்காவது நாள் ஆட்டம் தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்தில் நியூசிலாந்தை 167 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி மும்பையில் 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ரன்கள் வித்தியாசத்தில்   இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும், மேலும்  நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என கைப்பற்றி கோப்பையை வென்றுள்ளது.

5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் என்ற ஸ்கோருடன் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்தின் லோயர் ஆர்டரை ஜெயந்த்  துவம்சம் செய்ய, இந்தியாவுக்கு 7 ஓவர்கள் தேவைப்பட்டது. இன்று காலை அவ்வப்போது பவுண்ட்ரிகள் கொடுத்தாலும்,  ஜெயந்த் யாதவ் தொடர்ந்து நல்ல பந்துகளை வீசி நியூசிலாந்து வீரர்களை திணற வைத்தார்.

 வான்கடேயில் இருந்த காலை நேர ஈரப்பதம், நியூசிலாந்து வீரர்களுக்கு  அதை இன்னும் கடினமாக்கியது. முதல் டெஸ்ட்டில் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திராவிற்கு, இன்று பெரும் சவாலாக இருந்தது. ஒன்றிரண்டு பவுண்ட்ரிகள்  விளாசினாலும், நிறைய முறை பந்தை துரத்தி சென்று எட்ஜ்ஜில் இருந்து தப்பினார்.  கடும் போராட்டத்திற்கு பிறகு, ஜெயந்த் யாதவ் பந்தில் இரண்டாவது ஸ்லிப்பில் புஜாராவிடம்  எட்ஜ்  கொடுத்து 18 ரன்களில் முதல் ஆளாக வெளியேறினார்.

33 ரன்கள் சேர்த்த இந்த பாட்னர்ஷிப்பை முறியடித்தவுடன், நியூசிலாந்து அணி சரிவை நோக்கி விரைவாகச் சென்றது. ஜெயந்த் தனது அடுத்த ஓவரில் கைல் ஜேமிசன் மற்றும் டிம் சவுத்தி  இருவரையும் வெளியேற்ற, இந்தியா வெற்றியை நெருங்கியது. வில் சோமர்வில்லை ஷார்ட் லெக் திசையில் நின்ற அகர்வால் கேட்ச் பிடிக்க, ஜெயந்த் 4-49 என்று தனது சிறப்பான பந்துவீச்சைப் பதிவு செய்தார். ஆனால் மறுபுறம் பல முறை அவுட் வாய்ப்புகளில் இருந்து அதிஷ்டத்தால் தப்பி பிழைத்து 44 ரன்கள் சேர்த்த ஹென்றி நிக்கோல்ஸ் அரைசதத்தை அடிக்கும் நோக்கத்தில் இறங்கி ஆடி, அஸ்வின் பந்தில் ஸ்டம்பிங்கில் அவுட் ஆக, நியூசிலாந்து ஆல் அவுட் ஆனது. 

இதன் மூலம் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றது. நிக்கோல்ஸ் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவில் 300 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை எட்டினார். முரளிதரனுக்குப் பிறகு சொந்த நாட்டில் வேகமாக 300 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

சொந்த மண்ணில் வேகமாக 300 டெஸ்ட் விக்கெட்டுகள்:
48 எம் முரளிதரன்
49 ரவி அஸ்வின்*
52 அனில் கும்ப்ளே
65 ஷேன் வார்ன்
71 ஜிம்மி ஆண்டர்சன்
76 ஸ்டூவர்ட் பிராட்

இந்தியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்:
350 அனில் கும்ப்ளே
300 ரவி அஸ்வின்*
265 ஹர்பஜன் சிங்
219 கபில் தேவ். 

372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. ரன்கள் வித்தியாசத்தில் இதுவே இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். நியூசிலாந்து அணி மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி (ரன்கள் மூலம்):
372 எதிராக NZ, மும்பை 2021*
337 vs SA, டெல்லி 2015
321 vs NZ, இந்தூர் 2016
320 எதிராக AUS, மொஹாலி 2008

நியூசிலாந்தின் மிகப்பெரிய தோல்வி (ரன்களால்):
372 ரன்கள் எதிராக IND, மும்பை 202
358 ரன்கள் எதிராக SA, ஜோபர்க் 2007
321 ரன்கள் எதிராக IND, இந்தூர் 2016
299 ரன்கள் எதிராக PAK, ஆக்லாந்து 2001

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த அஜாஜ் பட்டேல், மும்பையில் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்துள்ளார்

ஒரு தோல்வி காரணத்திற்காக சிறந்த மேட்ச் பவுலிங் புள்ளிவிவரங்கள்:
14/225 - அஜாஸ் படேல் v IND, 2021*
13/132 - ஜவகல் ஸ்ரீநாத் v PAK, 1999
13/163 - சிட்னி பார்ன்ஸ் V AUS, 1902
13/217 - மெர்வ் ஹியூஸ் எதிராக WI, 1988
13/244 - டாம் ரிச்சர்ட்சன் v AUS, 1896

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தை மீண்டும் பிடித்துள்ள இந்திய அணி, அடுத்து தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

சுருக்கமான ஸ்கோர்
இந்தியா 325 (மயங்க் அகர்வால் 150; அஜாஸ் படேல் 10-119)& 276/7 (மயங்க் அகர்வால் 62, சி புஜாரா 47; அஜாஸ் படேல் 4-106, ரச்சின் ரவீந்திர 3-56) 
நியூசிலாந்து 62 ( ஜேமிசன் 17; அஸ்வின் 4-8) மற்றும் 167 (டேரில் மிட்செல் 60, ஹென்றி நிக்கோல்ஸ் 44; அஸ்வின் 4-34; ஜெயந்த் யாதவ் 4-49)

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு : காயத்தால் ஜடேஜா, அக்சர்,கில் நீக்கம் - ஓடிஐக்கும் ரோகித் கேப்டனாக நியமனம்

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்

மித்ரன்

இந்தியா- நியூசிலாந்து முதல் டெஸ்ட்: ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா அரைசதத்தில் தலை நிமிர்ந்தது இந்தியா - ஆட்டநேர முடிவில் 258-4