Nigazhvu News
23 Nov 2024 8:22 AM IST

Breaking News

இந்தியா- நியூசிலாந்து முதல் டெஸ்ட்: ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா அரைசதத்தில் தலை நிமிர்ந்தது இந்தியா - ஆட்டநேர முடிவில் 258-4

Copied!
Nigazhvu News

இந்தியா- நியூசிலாந்து முதல் டெஸ்ட்: ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா அரைசதத்தில் தலை நிமிர்ந்தது இந்தியா - ஆட்டநேர முடிவில் 258-4 

நியூசிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜடேஜா அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்து உள்ளது. 

இன்றைய ஆட்ட நேர முடிவில் அறிமுக வீரராக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா தனது 17வது டெஸ்ட் அரைசதத்தை பூர்த்தி செய்ய, நான்காவது விக்கெட்டுக்கு 100 ரன்களை இந்த ஜோடி சேர்த்தது. இருவரும் ஆட்டத்தின் கடைசிப் செசனில் விக்கெட் இழப்பின்றி 102 ரன்கள் சேர்த்தனர்.

நியூசிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி, கான்பூர் க்ரீன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. கேப்டன் அஜிங்யே ரஹானே பேட்டிங் தேர்வு செய்த பிறகு, சுப்மன் கில் மற்றும் மயங்க் அகர்வால் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

தட்டுத்தடுமாறி விளையாடிய இருவரும் பொறுமையாக ரன் சேர்த்தனர். இருவரும் அவுட் ஆகும் வாய்ப்பில் இருந்து தப்பி பிழைத்தாலும், கைல் ஜேமிசன் பந்தில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் மயங்க் அகர்வால். அஜாஸ் படேல் வீசிய இன்னிங்ஸின் ஒன்பதாவது ஓவரிலேயே கில் ஆட்டமிழந்திருக்கலாம். ஆனால் லெக் பிஃபோர் விக்கெட்டுக்கு மேல்முறையீடு செய்யப்படவில்லை.

அடுத்து ஜோடி சேர்ந்த சேதேஷ்வர் புஜாரா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் இந்தியாவை ஆரம்ப சிக்கலில் இருந்து காப்பாற்றினர்.‌இருவரும் மதிய உணவின் போது 82/1 என்ற நல்ல நிலையில் முடித்தனர். 

அரைசதம் அடித்த கில்(52) இரண்டாவது செல்வனில் மேலும் ரன் எதுவும் எடுக்காமல் ஜேமிசன் பந்துவீச்சில் போல்ட்டானார். மறுபுறம் தொடர்ந்து தடுமாறி மந்தமாக ஆடி வந்த புஜாரா 26 ரன்களில் தனது விக்கெட்டை சவுத்தியிடம் பறிகொடுத்தார். நடுவரின் தவறான முடிவில் இருந்து தப்பிய ரஹானேவும் 35 ரன்களில் போல்ட்டாகி நடையைக் கட்ட, இந்தியா 154 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 அடுத்து ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து படிப்படியாக ரன்சேர்க்க, இந்தியா மெதுவாக மீளத் தொடங்கியது.  தனது அறிமுகப்போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து அசத்தினார்.‌

அரைசதம் அடித்த இருவரும் முதல் நாள் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பொறுப்பாக ஆடி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன் என்ற நல்ல நிலையில் இருக்க, வெளிச்சக்குறைவினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

சுருக்கமான ஸ்கோர்: இந்தியா 258/4 (ஷ்ரேயாஸ் ஐயர் 75*, ரவீந்திர ஜடேஜா 50*; கைல் ஜேமிசன் 3-47) vs நியூசிலாந்து.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்

விஜய் ஹசாரே டிராபிக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு : விஜய் சங்கர் தலைமையில் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் தேர்வு - காயம் காரணமாக நடராஜன் விலகல்

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மும்பை டெஸ்ட்: இந்தியா அணி சாதனை வெற்றி - 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா

மித்ரன்

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்