Nigazhvu News
23 Nov 2024 12:27 PM IST

Breaking News

விஜய் ஹசாரே டிராபிக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு : விஜய் சங்கர் தலைமையில் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் தேர்வு - காயம் காரணமாக நடராஜன் விலகல்

Copied!
Nigazhvu News

விஜய் ஹசாரே டிராபிக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு : விஜய் சங்கர் தலைமையில் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் தேர்வு - காயம் காரணமாக நடராஜன் விலகல்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) மாநில தேர்வுக் குழு, விஜய் ஹசாரே டிராபிக்கான 20 பேர் கொண்ட தமிழக அணியை அறிவித்துள்ளது. கர்நாடகாவை வீழ்த்தி சையத் முஸ்டாக் அலி கோப்பையை வென்ற தமிழக அணியில் காயம் காரணமாக இடம்பெறாத மூத்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் அடுத்தடுத்த போட்டிகளை சுந்தர் தவறவிட்டார். ஐபிஎல் 2021ல் இரண்டாம் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக இடம்பெற்ற கார்த்திக் காயம் காரணமாக சையத் முஸ்டாக் தொடரின் கேப்டன் பதவியிலிருந்து விலகியதோடு, தொடரில் இருந்தும் வெளியேறினார்.  

இவர்கள் இருவரும் அணிக்கு திரும்பிய நிலையில், கர்நாடகாவுக்கு எதிராக திங்கள்கிழமை நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களை தமிழகம் தக்க வைத்துக் கொண்டுள்ளது. லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், கவுசிக் காந்தி, சஞ்சய் யாதவ் ஆகியோருடன் பாபா இந்திரஜித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அணியின் தலைவராக விஜய் சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியா ஏ அணியுடன் தற்போது தென்னாப்பிரிக்காவில் இருக்கும் பாபா அபராஜித், அந்தத் தொடர் முடிந்து இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சையத் முஸ்டாக் அலித் தொடரில் காயத்துடன் விளையாடிய நடராஜன், சரிவர விளையாடவில்லை. அதனால் மீண்டும் முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற, அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அணி: விஜய் சங்கர், என்.ஜெகதீஷன், தினேஷ் கார்த்திக், சி.ஹரி நிஷாந்த், ஷாருக் கான், ஆர்.சாய் கிஷோர், முருகன் அஷ்வின், சந்தீப் வாரியர், வாஷிங்டன் சுந்தர், எம்.சித்தார்த், பி.சாய் சுதர்சன், வி.கங்கா ஸ்ரீதர் ராஜு, எம்.முகமது, ஜே.கௌசிக், பி.சரவண குமார், எல்.சூர்யபிரகாஷ், பாபா இந்திரஜித், ஆர்.சஞ்சய் யாதவ், எம்.கௌசிக் காந்தி, ஆர்.சிலம்பரசன்


கடந்த ஆண்டின் சாம்பியன் மும்பைக்கு எதிரான  ஆட்டத்துடன் விஜய் ஹசாரே கோப்பையை  தமிழகம் தொடங்க உள்ளது. எலைட் குரூப் பியில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு அணி, நடப்பு சாம்பியனான மும்பையை எதிர்த்து டிசம்பர் 8-ம் தேதி திருவனந்தபுரத்தில் தனது முதல் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

எலைட் குரூப் பி பிரிவில் தமிழ்நாடு, மும்பையுடன், பரோடா, பெங்கால், கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களும் இடம் பெற்றுள்ளன.



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இந்தியா- நியூசிலாந்து முதல் டெஸ்ட்: ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா அரைசதத்தில் தலை நிமிர்ந்தது இந்தியா - ஆட்டநேர முடிவில் 258-4

ஸ்மாட் டி20 : கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து வென்று கொடுத்த ஷாருக்கான் - கோப்பையை தக்கவைத்துக் கொண்டது தமிழ்நாடு

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மும்பை டெஸ்ட்: இந்தியா அணி சாதனை வெற்றி - 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா

மித்ரன்

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்