Nigazhvu News
23 Nov 2024 3:56 PM IST

Breaking News

ஸ்மாட் டி20 : கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து வென்று கொடுத்த ஷாருக்கான் - கோப்பையை தக்கவைத்துக் கொண்டது தமிழ்நாடு

Copied!
Nigazhvu News

ஸ்மாட் டி20 : கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து வென்று கொடுத்த ஷாருக்கான் - கோப்பையை தக்கவைத்துக் கொண்டது தமிழ்நாடு 

கர்நாடகாவுக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பையின் இறுதி ஆட்டத்தில் கடைசி பந்தில் ஷாருக்கான் சிக்ஸர் அடித்து அசத்த, கர்நாடகாவை வென்று கோப்பையைத் தக்க வைத்து கொண்டது தமிழ்நாடு. 

உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப்போட்டியில் பரமவைரிகளான தமிழ்நாடு அணியும் கர்நாடகா அணியும் இன்று மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு பீல்டிங்கை தேர்வு செய்தது. 

சாய்கிஷோர் பந்துவீச்சில் தடுமாறிய கர்நாடகா அணி, மனோகர் 46 ரன் (37 பந்து), 33 ரன்(25 பந்து), சுசித் 18ரன் (7பந்து) என சிறப்பாக ஆட, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோர் (3-12) சிறப்பாக பந்து வீசிய அசத்தினார்.

152 ரன்கள் எடுத்தால் கோப்பையை தக்க வைக்கலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு ஹரி நிசாந்த் (12 பந்துகளில் 23 ரன்) எடுத்து துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஜெகதீசன் (46 பந்துகளில் 41 ரன்) மற்றும் விஜய் சங்கர் (22 பந்துகளில் 18 ரன்) இணை ரன் சேர்க்க தட்டுத் தடுமாறியது‌ 

இருவரும் கிட்டதட்ட 10 ஓவர்களுக்கு பவுண்ட்ரியே அடிக்காமல் ஆடி கடைசிக் கட்டத்தில் அவுட் ஆக, தமிழ்நாடு அணி கடைசி 4 ஓவர்களில் 50 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.‌

ஒருபுறம் எவ்வித துணையும் இல்லாமல் விக்கெட்டுகள் விழுந்தாலும், அடுத்து களமிறங்கிய ஷாருக்கான் அதிரடி காட்ட கடைசி ஓவரில், தமிழ் நாடு வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது 

பந்து வீச்சில் அசத்திய சாய் கிஷோர், முதல் பந்தில் பவுண்டரி அடித்த நம்பிக்கையோடு அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து ஷாருக்கானுக்கு ஸ்ட்ரைக்கில் ஆடும் வாய்ப்பை தந்தார். பிரதீக் ஜெய்ன் பவுண்ட்ரிகள் வழங்காமல் சிறப்பாக பந்து வீச, கடைசிப் பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. 

கடைசிப் பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், காலுக்குள் வீசப்பட்ட பந்தை ப்லிக் செய்து சிக்ஸர் அடித்த ஷாருக்கான் தமிழ்நாட்டிற்கு வெற்றிக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். 


சிறப்பாக ஆடிய ஷாருக்கான் (15 பந்துகளில் 33 ரன்) ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக தமிழ்நாடு கோப்பையை வென்றதோடு, மொத்தமாக மூன்று முறை சையத் முஷ்டாக் அலி கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது. 

இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா அணியும் கைப்பற்றி இருந்த நிலையில், மஞ்சள் சீருடை அணிந்த தமிழ்நாடு அணியும் கோப்பையை வென்றிருப்பதால் இந்த ஆண்டு மஞ்சளுக்கானது என்று ரசிகர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

விஜய் ஹசாரே டிராபிக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு : விஜய் சங்கர் தலைமையில் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் தேர்வு - காயம் காரணமாக நடராஜன் விலகல்

டி20 தொடர் : நியூசிலாந்தை துவம்சம் செய்து கோப்பையை வென்ற இந்தியா

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மும்பை டெஸ்ட்: இந்தியா அணி சாதனை வெற்றி - 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா

மித்ரன்

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்