விஜய் ஹசாரே டிராபி : தமிழ்நாடு, ஹிமாச்சல், சௌராஷ்டிரா சர்வீசஸ் காலிறுதிக்கு தகுதி | ருத்துராஜ் 4 சதங்கள் அடித்தும் மகாராஷ்டிரா வெளியேற்றம்
விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதிச் சுற்றுக்கு தமிழ்நாடு, இமாச்சல், சவுராஷ்டிரா, கேரளா மற்றும் சர்வீசஸ் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. விதர்பா vs திரிபுரா, கர்நாடகா vs ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் vs மத்தியப் பிரதேசம் என காலிறுதிக்கு முந்தைய போட்டியில் மோதுகின்றன. மகாராஷ்டிரா, பெங்கால் அணிகள் சிறப்பாக விளையாடியும் ரன் ரேட் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளன.
பேட்டிங் ஸ்டார்ஸ்:
சண்டிகர் அணிக் கேப்டன் மனன் வோஹ்ரா (141) தனது இரண்டாவது லிஸ்ட் ஏ சதத்தை அடித்தாலும், ருத்துராஜ் கெய்க்வாட்டின் 168 ரன்கள் மகராஷ்டிராவை வெற்றிக்கு (இலக்கு 310) 5 விக்கெட்டுகள் மற்றும் 7 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் அழைத்து சென்றது. ஆனாலும், ரன்ரேட் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை மகாராஷ்டிரா அணி இழந்தது.
இந்தப் போட்டியில் 132 பந்துகளில் 6 சிக்சர் 12 ஃபோர்களுடன் 168 ரன்கள் குவித்தார் ருத்துராஜ் கெய்க்வாட். விஜய் ஹசாரே டிராபியில் ஐந்து ஆட்டங்களில் நான்கு சதங்களுடன் 603 ரன்கள் எடுத்து, ருதுராஜ் கெய்க்வாட் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற தேர்வாளர்களின் கதவைத் தட்டியுள்ளார்.
கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்காக அன்மோல்ப்ரீத் சிங் (101), குர்கீரத் மான் (105) ஆகியோர் சதம் அடித்தனர். ஆனாலும் இரு அணிகளும் 288 ரன்களுடன் முடித்ததால் போட்டி டையில் முடிந்தது. 141 பந்தில் 16 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 148 ரன்கள் எடுத்தார் ஸ்னேஹல் கவுதாங்கர்.
இந்த சீசனில், ருத்துராஜைப் போலவே கேஎஸ் பாரத் இரண்டாவது முறையாக 150 ரன்களைக் கடந்தார். அவர் தனியொருவனாக 138 பந்தில் 156 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆந்திரா 81 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்துக்கு எதிராக வெற்றி பெற்றது. இலக்கை துரத்திய குஜராத் அணியால் 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது பெற முடிந்தது.
ஜம்மு & காஷ்மீருக்கு எதிரான 234 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய விதர்பா 5 விக்கெட்டுகள் மற்றும் 7 ஓவர்கள் மீதமிருக்க வெற்றி பெற்றது. ஃபைசல் 110 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் எடுத்தார்.
மணீஷ் பாண்டேவின் 85 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தும் கர்நாடகா அணி தோல்வியடைந்தது. மேற்கு வங்க அணி 253 ரன்கள் இலக்கை எட்டு பந்துகள் மீதமிருக்கும் நிலையில் எட்டி வெற்றி பெற்றது.
சச்சின் பேபியின் ஆட்டமிழக்காத 83 ரன்கள் உதவியுடன் கேரளா உத்தரகாண்ட்டை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக கேப்டன் பிஸ்தா 93 ரன்கள் அடிக்க உத்தராகண்ட் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது.
பவுலிங் ஸ்டார்ஸ் :
அங்கித் ராஜ்பூத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஹரியானாவுக்கு எதிராக உத்தரபிரதேச அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.ரிங்கு சிங்கின் 75 ரன்கள் உ.பி. 245 ரன்களுடன் முடிக்க உதவியது.சாஹல் மற்றும் ஹர்ஷல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இலக்கை துரத்திய ஹரியானா 39 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹர்ஷல் பட்டேல் 67 ரன்கள் குவித்தார்.
சி.வி.மிலிந்த் 63 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்தும் ஹைதராபாத் அணி ஜார்கண்ட் அணியிடம் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜார்க்கண்ட் நிர்ணயித்த 277 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி 240 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஷாபாஸ் நதீம் மற்றும் வருண் ஆரோன் மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர்.
ஃபபித் அகமது 10 ஓவரில் 16 ரன்களுக்கு 4 ரன்கள் எடுத்ததால், மும்பைக்கு எதிராக புதுச்சேரி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 157 ரன்களை மட்டுமே எடுத்த போதிலும், 139 ரன்களுக்கு மும்பையை ஆல் அவுட் செய்து வெற்றி பெற்றது. மும்பையின் கோமல் 70 ரன்கள் எடுத்தார்.
ஆல்ரவுண்ட் ஸ்டார்ஸ்:
குறைவான ரன்களை இலக்காக நிர்ணயித்த போதும், க்ருணால் பாண்டியாவின் ஆல்ரவுண்ட் பங்களிப்பு தமிழ்நாட்டிற்கு பரோடவிற்கு வெற்றியைத் தந்துள்ளது. பரோடாவின் இன்னிங்ஸில் க்ருனாலின் 38 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது, அடுத்த அதிகபட்சமாக 11 ரன்களே எடுத்தனர். பரோடா அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 115 ரன்களை துரத்திய தமிழக அணி மோசமாக ஆடி 20.2 ஓவரில் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.க்ருனால் என் ஜெகதீசன் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோரின் முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனாலும் ரன்ரேட் அடிப்படையில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு காலிறுதிக்கு தகுதி பெற்றது.
ரிஷி தவான் ஹிமாச்சலுக்காக பேட் மற்றும் பந்தில் சிறப்பாக விளையாடி ஒடிசாவுக்கு எதிராக 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தார். தவான் 58 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்து ஹிமாச்சல் 360/5 ரன் குவிக்க உதவினார். ஹிமாச்சல் கேப்டன் தவான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை 297 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.
எலைட் பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த ஹிமாச்சல் பிரதேசம் (A), தமிழ்நாடு (B), சவுராஷ்டிரா (C), கேரளா (D) , சர்வீசஸ் (E) அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. இரண்டாம் இடம் பிடித்த விதர்பா vs திரிபுரா, கர்நாடகா vs ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் vs மத்தியப் பிரதேசம் அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் போட்டியில் மோதுகின்றன. நான்கு போட்டிகளில் வென்றும் மகாராஷ்டிரா அணி, ரன் ரேட் அடிப்படையில் மத்திய பிரதேசிடம் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
உங்கள் கருத்தை பதிவிடுக