Nigazhvu News
23 Nov 2024 8:33 AM IST

Breaking News

ஐபிஎல் 2022 : தக்க வைக்கும் வீரர்களை அறிவித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர் விடுவிப்பு

Copied!
Nigazhvu News

ஐபிஎல் 2022 : தக்க வைக்கும் வீரர்களை அறிவித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர் விடுவிப்பு 

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான அணியில் தக்க வைத்துக்கொள்ளும் ரென்டென்சன் வீரர்களை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அறிவித்துள்ளது. அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்து அதிர்ச்சி அளித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் புதிதாக இரண்டு அணிகள் களமிறங்குவதால், பழைய அணிகள் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள  ஐபிஎல் நிர்வாகம் அனுமதி வழங்கியது.‌ அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களையும், 2 வெளிநாட்டு வீரர்களையும் அதில் நிர்வாகம் தக்க வைத்துக் கொள்ள முடியும். 

இந்நிலையில் அணியில் தக்க வைத்த ரென்டென்சன் வீரர்களின் பெயரை டெல்லி நிர்வாகம் அறிவித்துள்ளது.  அந்த அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட்டுடன், அதிரடி வீரர் ப்ரித்வி ஷா மற்றும் அக்சர் பட்டேலை தக்க வைத்துள்ள  டெல்லி அணி, அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகார் தவானை விடுவித்துள்ளது. 

அதேநேரத்தில் வெளிநாட்டு வீரர்கள் பிரிவில் அன்ட்ரிக் நோர்க்கியாவை தக்க வைத்து ஸ்டோய்னிஸ், ரபாடா மற்றும் ஸ்மித் போன்ற வீரர்களை விடுவித்துள்ளது. 

அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர்  மற்றும் ராபாடாவை தக்க வைக்காதது ரசிகர்ளுக்கு  அதிர்ச்சியாக உள்ளது. குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராபாடாவை தக்க வைக்கும் என் எதிர்பார்க்கப்பட்டது. புதிய அணிகளில் ஒன்று ஸ்ரேயாஸ் ஐயரை அணுகி இருக்கலாம் எனத் தெரிகிறது. 

கான்பூர் டெஸ்ட்டில் இன்று   அறிமுகமான கேபிடல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்,  ஏலத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளார் என டெல்லி தெரிவித்துள்ளது.

ஐயர் வெளியேறியதை கேபிட்டல்ஸ் ஒரு பின்னடைவாகக் கருதினாலும், பேட்டரின் முடிவால் அவர்கள் முற்றிலும் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்கள். 

ஏப்ரலில் தோள்பட்டை அறுவை சிகிச்சை காரணமாக ஐயர் முதல் லெக்கில் இருந்து வெளியேறிய பிறகு,  கேபிடல்ஸ் அணி கேப்டன் பொறுப்பை பந்திடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. 

தன்னையும், ஸ்ரேயாஸ் ஐயரையும் டெல்லா தக்க வைக்காது என்று அஸ்வின் சில நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது‌. 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஐபிஎல் 2022: வெளியானது ஐபிஎல் அணிகள் தக்க வைத்துள்ள வீரர்கள் விவரம் - முக்கிய வீரர்கள் விடுவிப்பு

ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாடுகிறாரா - வெளியாகும் ருசிகரத்தகவல்

Copied!
மித்ரன்

ஐபிஎல் : புதிய அணிகளின் வருகையில் பழைய அணிகளுக்கு உண்டான சிக்கல் - சமாளிக்க என்ன செய்ய வேண்டும்??

விஜயநேத்ரன்

ஐபிஎல் புதிய ரென்டென்சன் விதி அறிவிப்பு : சிஎஸ்கே விற்கு தோனி ஆடுவதை உறுதி செய்த பிசிசிஐ - மற்ற அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் விவரம்

மித்ரன்

ஐபிஎல் 2021 : காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனை - முதல் அணியாக ப்ளேஆப்பிற்குள் நுழைந்தது சென்னை

மித்ரன்

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் ஆர்சிபி கோப்பையை வெல்லுமா "இ சாலே கப் நம்தே"

மித்ரன்

நடப்பு ஐ.பி.எல் தொடரின் புதிய போட்டி அட்டவணை வெளியானது : முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதல்