ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாடுகிறாரா - வெளியாகும் ருசிகரத்தகவல்
இந்தியன் பிரீமியர் லீக்கின் சிறந்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர்களில் ஒருவர் சஞ்சு சாம்சன். இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டால் பட்டை தீட்டப்பட்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த இவர், கடந்த லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை தாங்கினார்.
2022 ஆம் ஆண்டிற்கு யார் யாரை தக்க வைப்பது என்று அணி நிர்வாகங்கள் ஆலோசித்து வரும் வேளையில், சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ள நிலையில், ராஜஸ்தான் அணி ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் , சாம்சன் ஆகியோரை தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
ஆனால் யாரை எந்த விலையில் தக்க வைப்பது என்ற குழப்பம் நிலவி இருக்கலாம். அது சஞ்சு சாம்சனுக்கு சாதகமாக இல்லாத நிலையில், அணியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்திருக்கலாம் எனவும் தெரிகிறது.
இப்பொழுது சஞ்சு சாம்சன் சென்னை அணியில் இணைய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக செய்திகள் உறுதி செய்கின்றன
ஏனெனில் இதுவரை இன்ஸ்டாகிராமில் ராஜஸ்தான் ராயல்ஸை பின்தொடர்ந்து கொண்டிருந்த சாம்சன் அதை அன்பாலோவ் செய்துவிட்டு, தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மட்டுமே பின் தொடருகிறார்.
2022 ஆம் ஆண்டு புதிய சீசனுக்கு முன்னதாக மெகா ஏலத்திற்கு வந்தால், அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்க முற்படலாம். தோனி இந்த ஆண்டு ஆடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இருக்கும் நிலையில், பல ஆண்டுகளாக விளையாடக்கூடிய விக்கெட் கீப்பிங் பேட்டரை அணி எதிர்பார்க்கும் வேளையில், சஞ்சு அதற்கு சரியான நபராக இருப்பார். ஆனாலும்ஏலத்திற்கு வந்தால், புதிய அணிகளும் அவருக்காக போட்டியிடும்.
ஐபிஎல் 2021 இல் ராஜஸ்தான் அணியாக செயல்படத் தவறினாலும், சாம்சன் 14 ஆட்டங்களில் 40.33 சராசரியுடன் 484 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஜடேஜா, வாட்சன் ஆகியோர் ராஜஸ்தான் அணியிலிருந்து சென்னைக்கு வந்து முக்கிய வீரராக மாறி ஜொலித்திருக்கிறார்கள். மேலும் சென்னை அணிக்கு வந்த பிறகு, வீரர்கள் அவர்களின் உச்சபட்ச உயரத்திற்கு செல்வது வாடிக்கை. அந்த மாயாஜாலம் சாம்சனுக்கும் நடக்குமா என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
முன்னதாக, எம்எஸ் தோனி அடுத்த சீசனில் விளையாடுவேன் என்று தெளிவுபடுத்தினார், மேலும் அவர் " இன்னும் வெளியேறவில்லை. ரசிகர்களுக்காக நாங்கள் மீண்டும் சென்னைக்கு வருவோம் என்று நம்புகிறேன். மீண்டும், நான் முன்பே சொன்னேன், அது பிசிசிஐ சார்ந்தது
இரண்டு புதிய அணிகள் வருவதால், CSK-க்கு எது நல்லது என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும். நான் முதல் மூன்று அல்லது நான்கில் இருப்பது பற்றி அல்ல. இது அணியின் எதிர்காலத்தைப் பாதிக்காமல் இருக்க ஒரு வலுவான அணியை உருவாக்குவது முக்கியம். அடுத்த 10 ஆண்டுகளுக்கு யார் பங்களிக்க முடியும் என்பதைப் பார்க்க நாம் கடினமாக இருக்க வேண்டும். இன்னும், நான் வெளியேறவில்லை. சென்னை அணியில் தான் இருக்கிறேன்" என கேகேஆருக்கு எதிரான 2021 ஐபிஎல் வெற்றியை சுருக்கமாக எம்எஸ் தோனி கூறினார்.
உங்கள் கருத்தை பதிவிடுக