ஐபிஎல் தக்கவைப்பு(Retention) விதிகள்: பழைய அணிகள் 2022 ஏலத்திற்கு முன்னதாக நான்கு வீரர்களை வைத்திருக்கலாம், புதிய அணிகள் மூன்று வீரர்களை தேர்வு செய்ய அனுமதி
எட்டு அணிகளும் தக்கவைத்த வீரர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு, ஏலத்திற்கு முன்னதாக இரண்டு புதிய அணிகளின் உரிமையாளர்கள் மீதமுள்ள வீரர்களிலிருந்து, மூன்று வீரர்களை முதலில் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படும்.
தற்போதுள்ள எட்டு ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக நான்கு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும், மேலும் இரண்டு புதிய உரிமையாளர்களும் 2022 ஏலத்திற்கு முன் மீதமுள்ள வீரர்களின் குழுவிலிருந்து மூன்று வீரர்களை வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏலத்திற்கான உறுதியான தேதி எதுவும் இல்லை என்றாலும், செலவுத் தொகை ரூ. 90 கோடியாக (சுமார் 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இருக்கும், இது 2021 ஏலத்தில் கிடைத்த ரூ.85 கோடியை விட சற்று அதிகமாகும்.
ஐபிஎல் நிர்வாகம் மற்றும் உரிமையாளர்களுக்கு இடையே இந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட வசதிகளில் இவையும் அடங்கும்.
தக்கவைத்து விதிகள்:
மூன்று இந்தியர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு (அல்லது) இரண்டு இந்தியர்கள் மற்றும் இரண்டு வெளிநாட்டு
என்ற விகிதத்தில் வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.
அந்த மூன்று பேரில், இந்தியாவுக்காக விளையாடாத வீரர்களும் இருக்கலாம்.
மேலும், 2018 சீசனுக்கு முந்தைய பெரிய ஏலத்தைப் போலன்றி, ஏலத்தில் ரைட்-டு மேட்ச் கார்டுகள் (ஆர்டிஎம்) இருக்காது.
லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய உரிமையாளர்களுக்கு செல்லும் மூன்று வீரர்களைப் பொறுத்தவரை, இரண்டு இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர்களின் கலவையாகத் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த வீரர்கள் தற்போதுள்ள உரிமையாளர்களால் தக்கவைக்கப்படாத வீரர்களின் குழுவிலிருந்து கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டுமா அல்லது பெரிய ஏலக் குழுவில் இருந்து எடுக்கப்பட வேண்டுமா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
மற்ற எட்டு அணிகளால் தக்கவைக்கப்படாத வீரர்களின் குழுவிலிருந்து மட்டுமே இரண்டு புதிய உரிமையாளர்கள் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டால், ஒரு பிளேயர்-டிராஃப்ட் அமைப்பு நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.
ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்குப் பதிலாக இரண்டு சீசன்களுக்குப் பிறகு ஐபிஎல் 2016 சீசனுக்கு முன்னதாக பிளேயர் டிராஃப்ட்டை நடத்தியது. இரண்டு புதிய உரிமையாளர்களுக்கான ஏலத்தின் போது அதிக ஏலத்தில் உரிமை பெற்றதன் அடிப்படையில், சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியை சூப்பர்ஜெயன்ட்ஸ் முதல் தேர்வு செய்தார்
தக்கவைப்புகளைப் பொறுத்தவரை, இறுதித் தேர்வு வீரரிடம் இருக்கும்: அவர் தக்கவைக்கப்பட வேண்டுமா அல்லது மீண்டும் ஏலக் குழுவிற்குச் செல்ல விரும்புகிறாரா என்பதை குறிப்பிட்ட வீரரே முடிவு செய்ய முடியும்.
அணியில் தக்க வைப்பதை விரும்பவில்லை எனில், அவரை நிர்வாகம் தக்க வைத்துக் கொள்ள முடியாது. ஏலத்தில் சிறந்த சம்பளத்தை பெற முடியும் என அவர் நம்பினால் அவர் தக்க வைப்பிலிருந்து வெளியேறி ஏலத்தில் இடம்பெறலாம்.
இன்னும் விவரங்கள் மற்றும் விதிகளை அறிவிக்காத நிலையில், வீரர்களைத் தக்கவைப்பதற்கான காலக்கெடு நவம்பர் இறுதியில் இருக்கும். அது ஐபிஎல்லின் முக்கிய விதிகள், தக்கவைக்கப்பட்ட ஒவ்வொரு வீரருக்கும் செலவழிக்கக்கூடிய அதிகபட்ச தொகை மற்றும் ஒவ்வொரு உரிமையாளரும் ஒட்டுமொத்தமாக செலவழிக்கக்கூடிய ஏல பர்ஸின் சதவீதம் ஆகியவை இறுதி செய்த பிறகு வெளியிடப்படும்.
2018 ஆம் ஆண்டில், கடைசியாக பெரிய ஏலம் நடந்தபோது, அணிகளுக்கு ரூ. 80 கோடி பர்ஸ் வழங்கப்பட்டது, மேலும் தக்கவைக்கப்பட்ட வீரர்களுக்கு அதிகபட்சமாக INR 33 கோடி செலவிடலாம்.அந்த நேரத்தில் அணிகள் ஐந்து வீரர்களை தக்கவைப்பு மற்றும் இரண்டு RTM அட்டைகள் மூலம் ஏலத்தில் திரும்ப வாங்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஏலத்திற்கு முன் ஒரு அணியானது அதிகபட்சமாக மூன்று வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டால்:
முதல் வீரருக்கு INR 15 கோடி,
இரண்டாவது வீரருக்கு INR 11 கோடி
மூன்றாவது வீரருக்கு INR 7 கோடி
என நிர்ணயிக்கப்பட்டது.
குறிப்பு : ஒரு வீரரின் தக்க வைப்பு சம்பளம் ஏற்கனவே வாங்குவதை விட அதிகமாக இருந்தால், அதுவே நிர்ணயிக்கப்பட்டது. . உதாரணமாக விராட் கோலிக்கு RCB மூலம் INR 17 கோடி வழங்கப்பட்டது.
இரண்டு வீரர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டால்,
முதல் வீரர் 12.5 கோடி
இரண்டாவது 8.5 கோடி
ரூபாயும் நிர்ணயிக்ப்படட்டது.
ஒரு வீரரை மட்டும் தக்க வைத்துக் கொண்டால், அந்த உரிமையாளரின் பர்ஸில் இருந்து 12.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
அப்போது, ஐபிஎல் தொடரில் தக்கவைக்கப்பட்ட இந்திய அணிக்காக விளையாடாத ஒரு வீரருக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.
ஏலத்திற்கு வரும் பெரும் நட்சத்திரங்கள் :
2023 ஆம் ஆண்டு புதிய அணிகள் களமிறங்குவதாலும், ரைட்-டூ-மேட்ச் கார்டுக்கு அனுமதி இல்லாததாலும் தக்கவைப்பு முக்கியத்துவம் வகிக்கிறது
சென்னை சூப்பர் கிங்ஸை அவர்களின் நான்காவது ஐபிஎல் பட்டத்திற்க இட்டுச் சென்ற பிறகு, தோனி " அடுத்த பத்து ஆண்டுகளுக்கான அணியாக இருக்குமாறு புதிய அணி கட்டமைக்கப்படும் " என்று தெரிவித்தார்.
சில நாட்களுக்குப் பிறகு, சூப்பர் கிங்ஸின் உரிமையாளர் என் சீனிவாசன், "தோனி இல்லாமல் சிஎஸ்கே இருக்காது, சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை" என்று கூறினார், அவரைத் தக்க வைத்துக் கொள்ளும் உரிமையை வலுவாக சுட்டிக்காட்டினார்.
சமீபத்தில் முடிவடைந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த கோஹ்லி தனது பதவிக்காலத்தை முடித்துக்கொண்டார், ஆனால் தான் ஓய்வு பெறும் வரை அணிக்காக விளையாடுவேன் என்று கூறினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மோசமான தருணத்தை எதிர்கொண்ட டேவிட் வார்னர் ஏலத்தில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதைப்போல தக்க வைப்பு விதிகளின் நிர்பந்தத்தால் சென்னை அணியில் ஷர்துல் தாகூர், மும்பை அணியின் இஷான் கிஷான், சூர்ய குமார் யாதவ், டெல்லி அணியின் அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோரும் ஏலத்தில் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது.
ராகுலைப் பொறுத்தவரை, கேப்டன் ராகுல் பேட்டிங்கில் சிறந்த ஃபார்ம் இருந்தபோதிலும், இந்த சீசனில் பிளேஆஃப்களுக்குச் செல்லாத பஞ்சாப் கிங்ஸுடன் அவர் பிரிந்து செல்வது குறித்து ஊகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதனால் அவர் புதிய அணியில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உங்கள் கருத்தை பதிவிடுக