Nigazhvu News
23 Nov 2024 8:15 AM IST

Breaking News

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் ஆர்சிபி கோப்பையை வெல்லுமா "இ சாலே கப் நம்தே"

Copied!
Nigazhvu News

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் ஆர்சிபிகோப்பையை வெல்லுமா "இ சாலே கப் நம்தே"

ஐபிஎல்2021 இரண்டாவது பகுதி தொடருக்கு அதிரடி மாற்றங்களை வெளியிட்டுள்ளது ஆர்சிபி அணி.  நான்கு வெளிநாட்டு வீரர்களில் மூவருக்கு மாற்றுவீரர்களை அறிவித்திருக்கிறது.

ஐபிஎல் 2021 ஆட்டங்கள் கொரோனா பரவலின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.இதன் இரண்டாவது பகுதி ஆட்டங்கள் யு.ஏ.இல் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பாக விளையாடி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி அதிரடி மாற்றுவீரர்களை வெளியிட்டுள்ளது. 

பெங்களூரு அணியில் நியூசிலாந்து வீரர்கள் ஃபின் ஆலன், ஸ்காட் குக்கெலிஜின் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேன் ரிச்சர்ட்ஸன், டேனியல் சாம்ஸ் மற்றும் ஆடம் சாம்பா ஐந்து வெளிநாட்டு வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கான மாற்றுவீரர்களை இன்று அறிவித்துள்ளது. 

ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பாவிற்கு மாற்றாக இலங்கை அணியின் புதிய நட்சத்திர வீரர் வணிந்து ஹசரங்காவை ஒப்பந்தம் செய்துள்ளது.  


அதே போல்  வேகப்பந்துவீச்சாளர் டேனியல் சாம்ஸ்க்கு பதிலாக இலங்கை வீரர் துஷ்யந்த் சமீராவையும், நியூசிலாந்தின் பின் ஆலனுக்கு மாற்றாக சிங்கப்பூரைச் சேர்ந்தவரும் ஆஸ்திரேலியா பிக்பேஷ் தொடரில் கலக்கியவருமான இளம் வீரர் டிம் டேவிட்டையும் அறிவித்துள்ளது. 

எஞ்சியுள்ள இன்னுமொரு வீரருக்கு மாற்று வீரரை தன் தேடிக்கொண்டிருக்கும் ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சைமன் கேடிச் விலகியுள்ளார். இதனால் அந்த அணியின் நிர்வாக இயக்குனர் ஹெஸ்ஸன் பயிற்சாளர் பொறுப்பையும் ஏற்க உள்ளதாக அறிவித்துள்ளார். 

அதேபோல் பஞ்சாப் அணி ரிச்சர்ட்சன் மற்றும் மெரிடித் ஆகியோர் விலகியதை அடுத்து,ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாதன் எல்லிஸை மாற்று வீரராக அறிவித்துள்ளது. 

ஜோப்ரா ஆர்ச்சர், பென்ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோர் விலகியதை அடுத்து தடுமாறிய இராஜஸ்தான் ராயல்ஸ் அணி நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸை ஒப்பந்தம் செய்துள்ளது. 

இதைப்போல மற்ற அணிகளும் காயமடைந்த மற்றும் விலகிய வீரர்களுக்கான மாற்று வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதால், இரண்டாம் பாதி தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஐபிஎல் 2021 : காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனை - முதல் அணியாக ப்ளேஆப்பிற்குள் நுழைந்தது சென்னை

நடப்பு ஐ.பி.எல் தொடரின் புதிய போட்டி அட்டவணை வெளியானது : முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதல்

Copied!
விஜயநேத்ரன்

ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாடுகிறாரா - வெளியாகும் ருசிகரத்தகவல்

மித்ரன்

ஐபிஎல் : புதிய அணிகளின் வருகையில் பழைய அணிகளுக்கு உண்டான சிக்கல் - சமாளிக்க என்ன செய்ய வேண்டும்??

விஜயநேத்ரன்

ஐபிஎல் புதிய ரென்டென்சன் விதி அறிவிப்பு : சிஎஸ்கே விற்கு தோனி ஆடுவதை உறுதி செய்த பிசிசிஐ - மற்ற அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் விவரம்

மித்ரன்

ஐபிஎல் 2021 : காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனை - முதல் அணியாக ப்ளேஆப்பிற்குள் நுழைந்தது சென்னை

மித்ரன்

நடப்பு ஐ.பி.எல் தொடரின் புதிய போட்டி அட்டவணை வெளியானது : முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதல்