Nigazhvu News
23 Nov 2024 3:50 AM IST

Breaking News

பிப்ரவரி 12,13ல் பெங்களுரூவில் நடக்கிறது ஐபிஎல்லின் பிரமாண்ட மெகா ஏலம் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப்பட்டியல் ஜனவரி இறுதிக்குள் உறுதி

Copied!
Nigazhvu News

பிப்ரவரி 12,13ல் பெங்களுரூவில் நடக்கிறது  ஐபிஎல்லின் பிரமாண்ட மெகா ஏலம்  - ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப்பட்டியல்  ஜனவரி இறுதிக்குள் உறுதி 

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலத்திற்கான பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இரண்டு புதிய அணியின் உரிமையாளர்களும் ஏலக் குழுவிலிருந்து மூன்று வீரர்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, ஏலத்திற்கான முழு வீரர்களின் பட்டியல் ஜனவரி நடுப்பகுதியில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அணிகள் மூன்று வீரர்களைத்தேர்வு செய்வதற்கான இறுதி தேதி டிசம்பர் 25 ஆகும். ஆனால் இந்த காலக்கெடு ஒத்திவைக்கப்படும் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. BCCI இன்னும் அதிகாரப்பூர்வமாக அகமதாபாத் அணியின் உரிமையை CVC கேபிடல் பார்ட்னர்களுக்கு அளிக்கவில்லை. அவர்கள் அக்டோபரில்  நடந்த உரிமையைப் பெறும் ஏலத்தில் 5625 கோடி ரூபாய் (சுமார் 750 மில்லியன் டாலர்) முன் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி மற்றும் பிரேசிலில் உள்ள இரண்டு பந்தய நிறுவனங்களுடனான CVC யின் உறவுகள் தொடர்பான சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, பிசிசிஐ இன்னும் அதைப் பரிசீலனையில் வைத்துள்ளது. இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதால், வீரர்களைத் தேர்ந்தெடுக்கும்  காலக்கெடு நீட்டிக்கபடலாம் எனத் தெரிகிறது.

தற்போதுள்ள எட்டு ஐபிஎல் அணிகள் ஏற்கனவே நவம்பர் 30 ஆம் தேதி தங்கள் தக்கவைப்பு செயல்முறையை முடித்துவிட்டன. அவர்களை மையமாக வைத்து  தேவையான வீரர்களை கண்டறியும் முனைப்பில் அவை ஈடுபட்டுள்ளன. அவர்களை  பிப்ரவரி 12 ஆம் தேதி நடக்கும் ஏலத்தில்  தங்கள் அணிக்கு எடுக்க ஏலத்தில் பங்கெடுக்கும். 

தற்போதுள்ள அணிகளைப் போலவே, புதிய உரிமையாளர்களும் 90 கோடி ரூபாய் (சுமார் 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பர்ஸுடன் தொடங்கி, மெகா ஏலத்திற்கு முன் மூன்று வீரர்கள் வரை சலுகைகளை  தேர்ந்தெடுத்து கொள்ளலாம். மீதமுள்ள தொகைக்குள் ஏலத்தில் பங்கேற்று, மற்ற வீரர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.  தற்போதுள்ள நிலையில் பஞ்சாப் அணி அதிக தொகையை வைத்துள்ளது. இதில் RTM  எனப்படும் ரைட் டூ மேட்ச் கார்டு சலுகை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 17-ம் தேதிக்குள் ஏலத்தில் சேர வேண்டிய வீரர்களின் பெயர்களை அனுப்புமாறு சர்வதேச  கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் மாநில சங்கங்களுக்கு பிசிசிஐ சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளது.

இந்த ஆண்டு 10 அணிகளுக்காக நடத்தப்படும் இந்த மெகா ஏலத்தில் 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்வார்கள். இதில் 250முதல் 280பேர் வரை ஏலத்தில் விலைபோகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி பிப்ரவரி 12ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.  ஆனாலும் திட்டமிட்டபடி, இரண்டும் குறித்த நேரத்தில் நடக்கும் என்று பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஏலத்தில் வரைமுறைகள் மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றிய விளக்கக் கூட்டம் பிப்ரவரி 11 அன்று நடைபெறுவதால், மாலைக்குள் பெங்களூரில் இருக்குமாறும் ஐபிஎல் அதிகாரிகள் உரிமையாளர்களுக்கு  தெரிவித்துள்ளனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஐபிஎல் 2022: வீரர்களை தக்க வைப்பிற்கு பின்னால் நடந்த கதை: மொயின் & சூர்யாவின் விஸ்வாசமும், பாண்ட்யா & ராகுலின் பேராசையும்

Copied!
மித்ரன்

ஐபிஎல் : புதிய அணிகளின் வருகையில் பழைய அணிகளுக்கு உண்டான சிக்கல் - சமாளிக்க என்ன செய்ய வேண்டும்??

விஜயநேத்ரன்

ஐபிஎல் புதிய ரென்டென்சன் விதி அறிவிப்பு : சிஎஸ்கே விற்கு தோனி ஆடுவதை உறுதி செய்த பிசிசிஐ - மற்ற அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் விவரம்

மித்ரன்

ஐபிஎல் 2021 : காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனை - முதல் அணியாக ப்ளேஆப்பிற்குள் நுழைந்தது சென்னை

மித்ரன்

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் ஆர்சிபி கோப்பையை வெல்லுமா "இ சாலே கப் நம்தே"

மித்ரன்

நடப்பு ஐ.பி.எல் தொடரின் புதிய போட்டி அட்டவணை வெளியானது : முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதல்