Nigazhvu News
23 Nov 2024 7:56 AM IST

Breaking News

ஐபிஎல் புதிய ரென்டென்சன் விதி அறிவிப்பு : சிஎஸ்கே விற்கு தோனி ஆடுவதை உறுதி செய்த பிசிசிஐ - மற்ற அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் விவரம்

Copied!
Nigazhvu News

ஐபிஎல் புதிய ரென்டென்சன் விதி அறிவிப்பு : சிஎஸ்கே விற்கு தோனி ஆடுவதை உறுதி செய்த பிசிசிஐ -  மற்ற அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் விவரம் 

உலக கிரிக்கெட் அரங்கின் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பியதில் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு முக்கிய பங்கு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மையாகும். உலகத்தரத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளின் இரசிகர்களின் மனதோடு இணைவதற்கு அந்த அணிகளில் விளையாடும் வீரர்களும் ஒரு காரணமாகும். 

சென்னை என்றால் தோனி மற்றும் ரெய்னா, மும்பை என்றால் சச்சின் மற்றும் ரோகித், பெங்களுரூ என்றால் கோலி என்று சொல்லிக்கொண்டே போகலாம். போட்டி நடைபெறும் நாட்களில் ஒரு அணியின் இரசிகர்கள் மற்றொரு அணியினரை கலாய்த்துப் பதிவிடுவதில் தொடங்கி, வெற்றி தோல்வி வரை அனைத்துமே சமூக வலைதளங்களில் டிரெண்டிங்தான். 

இப்படி ஒவ்வொரு அணியிலும் ஆணிவேராக இருக்கும் வீரர்களை, அந்த அணியாகவே இரசிகர்கள் பார்த்து வந்தனர். ஆனால், 2022ஆம் ஆண்டில் மீண்டும் மெகா ஏலம் என்று அறிவித்ததோடு, புதிதாக  இரண்டு அணிகள் களமிறங்கும் என்ற ஐபிஎல் நிர்வாகத்தின் அறிவிப்பால், அணி நிர்வாகம் மட்டுமின்றி ஒட்டு இரசிகர்களையும் சற்று அதிர்ச்சியடைய வைத்தது. 

சாதரணமாக தக்க வைக்க இயலாத சில வீரர்களை RTM என்ற ரைட்-டூ- மேட்ச் முறையில் திரும்ப வாங்கும் வசதி இருந்தது அணி நிர்வாகத்திற்கு உதவியாக இருந்தது‌. ஆனால், ஏலத்திற்கு முன்பாகவே புதிய அணிகள் குறிப்பிட்ட சில வீரர்களை தேர்ந்தெடுக்கலாம் என்பதால், சில முக்கிய வீரர்களை இழக்கும் சூழ்நிலைக்கு பழைய அணிகள் தள்ளப்பட்டது.  

இதனால் தக்கவைப்புக் கொள்கை(Retention policy) எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமானது‌. குறிப்பாக தோனி, ரென்டென்சன் பாலிசியைப் பொறுத்தே அடுத்த ஆண்டு தொடர்ந்து விளையாடுவதைத் தீர்மானிக்கப் போவதாக அறிவித்ததை அடுத்து, இது சமூக வலதளங்களில் தலையங்கமானது. 

புதிய ரென்டென்சன் : 

தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா?  மாட்டாரா? என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஐபிஎல் நிர்வாகம் தக்க வைக்கும் வீரர்களுக்கான விதியை அறிவித்துள்ளது.

அதன்படி : 

அணியில் மொத்தமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். 

அதில் ஒரு அணியில் அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களையும், இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ளலாம். 

ஏலத்தின் போது RTMயை பயன்படுத்த முடியாது. 

புதிய அணிகள் ஏலத்திற்கு முன்பாக 2-3வீரர்களை (அதிகபட்சம் 3 இந்திய வீரர்கள், இரண்டு வெளிநாட்டு வீரர்கள்) தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். 


இது சென்னை அணியில் தோனி விளையாட அதிக நம்பிக்கையை உண்டாக்கி உள்ளது. அதைப்போல தக்க வைக்கப்படும் மற்ற வீரர்களின் விவரங்களை இங்கு விவாதிக்கலாம்.


சென்னை சூப்பர் கிங்ஸ் : 

சென்னை அணி தோனியை நிச்சயமாக தக்க வைத்துக் கொள்ளும். அவருடன்  நட்சத்திர வீரர் ஜடேஜா மற்றும் புதிய நம்பிக்கை நட்சத்திரம் கெய்க்வாட் ஆகியோரையும்  நிச்சயமாக தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.  இந்திய வீரர் ரெய்னா இந்த ஆண்டு விடுவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

வெளிநாட்டு வீரர்களில் டூபிளஸ்சி, மொயின் அலி மற்றும் சாம் கர்ரண் ஆகிய மூவரில் ஒருவர் தக்க வைக்கப்படலாம். அதில் மொயின் அலியை அதிக தொகைக்கு வாங்கிய உள்ளதாலும், அவர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாலும், அவரை தக்க வைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.‌ 

Expected Retains :Jadeja, Ruturaj, Dhoni, Moen ali


மும்பை இந்தியன்ஸ்

இந்த மெகா ஏலத்தால் அதிக இழப்புகளை சந்திக்கும் அணி மும்பை மட்டுமே. சில முக்கிய வீரர்களை இழந்தாலும், தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களை சந்தேகமின்றி அறிந்து கொள்ள முடியும். 

அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை நிச்சயமாக தக்க வைக்கும் 

மூன்றாவது இந்திய வீரருக்கான போட்டியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் என போட்டி குழப்பம் இருந்தாலும், ஹார்திக் பாண்டியாவே நீடிப்பார் எனத் தெரிகிறது. அதே போல் வெளிநாட்டு வீரர்களில் கைரன் போலார்டு தக்க வைக்கப்படுவார் என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை 

Expected Retains :Rohit, Bumrah,Hardik,Pollard


இராயல் சேலஞ்சர் பெங்களுரூ: 

பெங்களூர் அணியைப் பொறுத்த வரையில், விராட் கோஹ்லி மற்றும் இளம் வீரர் தேவ்துத் படிக்கத் ஆகியோரை தக்க வைக்கும். மூன்றாவது வீரருக்கான போட்டியில் சாஹல் மற்றும் சிராஜ் இடையே போட்டி இருக்கலாம். இருந்தாலும் சாஹலை தக்க வைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு வீரர்களில் மேக்ஸ்வெல்  மற்றும் டிவில்லியர்ஸ் இருவரில் ஒரு வீரரை தக்க வைக்கும்‌. இப்போதைய நிலையில் மேக்ஸ்வெல் தக்க வைக்கப் படுவதற்கே வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் தக்க வைக்க எண்ணினால், சாஹலை விடுவிக்கும். 

Expected Retains :Kohli, Padikkal, Maxwell , ABD / chahal


டெல்லி கேப்பிட்டல்ஸ் 

டெல்லி அணி கடந்த ஏலத்தின் போதே, இளம் வீரர்களைக் கொண்டு கட்டமைத்து உள்ளது. அதனால் அந்த அணி விக்கெட் கீப்பர் கேப்டன் ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ப்ரித்வி ஷாவை தக்க வைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

ஷிகார் தவான், அஸ்வின், ஆவேஸ்கான் மற்றும் அக்சர் பட்டேல் விடுவிக்கப்படலாம்.

வெளிநாட்டு வீரர்களில்  வேகப்பந்து வீச்சாளர் ககிசோ இராபாடா தக்க வைக்கப்படலாம். 

Expected Retains: Pant, Shreyas Iyer, Prithvi Shaw, Rabada 

Doubtful : Axar, Avesh Khan


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

கொல்கத்தா அணி வெளிநாட்டு வீரர்களை தக்க வைக்கவே அதிக முனைப்பு எடுக்கும் எனத்  தெரிகிறது‌. அதிரடி வீரர் ஆண்ட்ரூ ரசல் மற்றும் சுனில் நரைன் என இரண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை நிச்சயமாக தக்க வைத்துக் கொள்ளும். 

இந்திய வீரர்களில் வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரில் இருவரைத் தக்க வைக்கலாம். 

Expected Retains : Andre Russel, Sunil narine, Varun , Gill /Venkatesh


இராஜஸ்தான் இராயல்ஸ் :

இராஜஸ்தான் அணி இந்திய வீரர்களில் சஞ்சு சாம்சன் தவிர வேறெந்த இந்திய வீரர்களையும் தக்க வைக்காது என்றே தோன்றுகிறது. இளம் வீரர் ஜெய்ஸ்வாலை தக்க வைக்கலாம் என்று தோன்றினாலும், அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவே.

ஆனால் இரண்டு வெளிநாட்டு வீரர்களை நிச்சயமாக தக்க வைக்கும். பென் ஸ்டோக்ஸ் விளையாடத பட்சத்தில், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஸ் பட்லரை தக்க வைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

Expected Retains :Sanju Samson, Archer, Butler, Jaiswal


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

கடந்த தொடரில் படுதோல்வியைச் சந்தித்த ஹைதராபாத் அணி, முதல் வீரராக ஆப்கானிஸ்தான் வீரர் ரசித்கானை தக்க வைக்கும். அவரைத் தவிர, கேப்டன் பதிவிக்காக கேன் வில்லியம்சனை தக்க வைக்கலாம். 

இந்திய வீரர்களில் யாரையும் தக்க வைக்காது என்றே தோன்றுகிறது. அப்படி ஒருவேளை தக்க வைக்க விரும்பினால் புவனேஸ்வர் குமாரை அணியில் தொடர வாய்ப்பு இருக்கிறது. 

Expected Retain: Rashid Khan 

Doubtful : Williamson, Bhuvaneshwar Kumar 


பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் வில் உறுதியற்ற அணி என்றால் அது பஞ்சாப்தான் என்பது நாம் அறிந்ததே. மார்ஷ், மில்லர் தவிர, அவர்கள் எந்த ஒரு வீரரின் மீதும் பெரிதாக நம்பிக்கை வைத்து தக்க வைத்தது இல்லை. 

ராகுல் புதிய அணியில் இணைய உள்ளதாக செய்திகள் உலாவும் நிலையில், இந்த முறையும் முற்றிலுமாக ஒரு புதிய அணியைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

அந்த அணிக்காக சிறப்பாக விளையாடிய ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் இருவரையும் தக்க வைத்துக்கொண்டால் பஞ்சாப்பிற்கு நல்லது. அதே வேளையில் மூன்றாவது வீரராக முகமது சமியைத் தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது.  வெளிநாட்டு வீரர்கள் யாரும் சிறப்பாக ஆடாததால், யாரையும் தக்க வைக்காது என்றே தோன்றுகிறது. ஒருவேளை பூரான் மீது நம்பிக்கை வைத்து தக்க வைத்தால், அது ஆச்சர்யமான ஒன்றுதான். 

Expected Retains: Rahul, Mayang, shami 


புதிய அணிகள்: 

புதிய இரண்டு அணிகளில்  அகமதாபாத்தை மையமாகக் கொண்ட அணியை அதானி குழுமம் வாங்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே அவர்கள் குஜராத் வீரர்களை தக்க வைக்க நினைக்கலாம். க்ருணால் பாண்டியா, அக்சர் பட்டேல், சகாரியா போன்ற மண்ணின் மைந்தர்களை அந்த அணி குறிவைத்து தேர்வு செய்தாலும் வியப்பில்லை 

இவர்களோடு, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான்  ஷர்துல் தாகூர், அஸ்வின், தவான், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், மணிஷ் பாண்டே,, ராகுல் சாஹர், பேர்ஸ்டோ, டூபிளஸ்ஸி, டிகாக், ஸ்மித் போன்ற முக்கிய வீரர்களை, ஏலத்திற்கு முன்பான நேரடித்தேர்வில் புதிய அணிகள் குறி வைக்கலாம். 

இளம் வீரர்கள்

இதுவரை இந்தியாவிற்கு ஆடாத ரவி பிஷ்னோய், ஆவேஸ் கான், சிவம் மாவி, ஷாருக்கான், இம்ரான் மாலிக் போன்ற வீரர்களை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நடக்கும். 

டிசம்பர் மாதத்தில் ஏலம் நடக்கும் என்பதால், இன்னும் சிலநாட்களில் தக்க வைக்கப்படும் வீரர்கள் யார் யார் என்பது தெரிந்து விடும். நமது கணிப்புகள் எவ்வளவு தூரம் சரியாக இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்...

✍️ விஜயநேத்ரன்  



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஐபிஎல் : புதிய அணிகளின் வருகையில் பழைய அணிகளுக்கு உண்டான சிக்கல் - சமாளிக்க என்ன செய்ய வேண்டும்??

ஐபிஎல் 2021 : காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனை - முதல் அணியாக ப்ளேஆப்பிற்குள் நுழைந்தது சென்னை

Copied!
விஜயநேத்ரன்

ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாடுகிறாரா - வெளியாகும் ருசிகரத்தகவல்

மித்ரன்

ஐபிஎல் : புதிய அணிகளின் வருகையில் பழைய அணிகளுக்கு உண்டான சிக்கல் - சமாளிக்க என்ன செய்ய வேண்டும்??

மித்ரன்

ஐபிஎல் 2021 : காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனை - முதல் அணியாக ப்ளேஆப்பிற்குள் நுழைந்தது சென்னை

மித்ரன்

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் ஆர்சிபி கோப்பையை வெல்லுமா "இ சாலே கப் நம்தே"

மித்ரன்

நடப்பு ஐ.பி.எல் தொடரின் புதிய போட்டி அட்டவணை வெளியானது : முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதல்