Nigazhvu News
23 Nov 2024 8:09 AM IST

Breaking News

ஐபிஎல் 2022: களமிறங்கும் முன்பே நரித்தனம் செய்த லக்னோ அணி - புகார் செய்த மற்ற அணிகள்

Copied!
Nigazhvu News

ஐபிஎல் 2022: களமிறங்கும் முன்பே நரித்தனம் செய்த லக்னோ அணி - புகார் செய்த மற்ற அணிகள் 

ஐபிஎல்லில் களமிறங்குவதற்கு மற்ற அணியின் முன்னணி வீரர்களை இழுக்க நரித்தனம் செய்த லக்னோ அணியின் செயலைக் கண்டித்து மற்ற அணிகள் நிர்வாகத்திடம்  புகார் அளித்துள்ளது.

8 அணிகள் பங்கேற்று வந்த ஐபிஎல் தொடர், இந்த ஆண்டு 2 புதிய அணிகளுடன் 10 அணிகளாக நடக்க இருக்கிறது. இதனால் வீரர்களை தக்க வைத்துக்கொள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய  தக்கவைப்பு விதிகளை வெளியிட்டது ஐபிஎல் நிர்வாகம். அதன்படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. அதில் அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களையும், 2 வெளிநாட்டு வீரர்களையும் தக்க வைத்துக்கொள்ளலாம்.

பழைய அணிகள் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலில் இருந்து தலா மூன்று வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்ள புதிய அணிகள் அனுமதி வழங்கி உள்ளது. இரண்டு இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை புதிய அணிகள் ஏலத்திற்கு முன்பாக ஒப்பந்தம் செய்ய முடியும் என்பதால், புனே மற்றும் லக்னோ அணிகளின் உரிமையை வாங்கியுள்ள உரிமையாளர்கள்  அதற்கான முயற்சியை மேள்கொள்ளும் வேலையில் இறங்கி உள்ளன.‌

இந்நிலையில் லக்னோ அணி நிர்வாகிகள்  தங்கள் வீரர்களுடன் முன் அனுமதியின்றி தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகிகள்  இந்தியன் பிரீமியர் லீக் நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல் மற்றும் ஹைதராபாத் அணியின் ரஷித்கான் ஆகியோரை லக்னோ அணியில் சேர்த்துக் கொள்ள,  தங்களின் அனுமதியைப் பெறாமல் பேச்சு வார்த்தை நடத்துவதாக அந்த அணி உரிமையாளர்கள் விமர்சித்து உள்ளனர்.

இது பற்றி கருத்து தெரிவித்த பிசிசிஐ நிர்வாகி "எங்களுக்கு  எழுத்து பூர்வமாக எந்த கடிதமும் வரவில்லை. ஆனால் லக்னோ அணி வீரர்களை இழுத்தது  குறித்து இரண்டு உரிமையாளர்களிடமிருந்து வாய்மொழி புகார் வந்துள்ளது. நாங்கள் விசாரித்து வருகிறோம், உண்மை என நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுப்போம். ஒரு அணியின் சமநிலையை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. கடுமையான போட்டி இருக்கும் போது இதுபோன்ற விஷயங்களை தவிர்க்க முடியாது. ஆனால் தற்போதுள்ள அணிகள் ஏற்கனவே உள்ள அணிகளை உடைப்பது நியாயமில்லை." என்று தெரிவித்துள்ளார். 

கே.எல். ராகுல் பஞ்சாப்பை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், ரஷித் கான் குறித்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை, ஏனெனில் அவருக்கும் அவரது ஐபிஎல் அணிக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஐபிஎல் 2022: வீரர்களை தக்க வைப்பிற்கு பின்னால் நடந்த கதை: மொயின் & சூர்யாவின் விஸ்வாசமும், பாண்ட்யா & ராகுலின் பேராசையும்

ஐபிஎல் 2022: வெளியானது ஐபிஎல் அணிகள் தக்க வைத்துள்ள வீரர்கள் விவரம் - முக்கிய வீரர்கள் விடுவிப்பு

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

ஐபிஎல் : புதிய அணிகளின் வருகையில் பழைய அணிகளுக்கு உண்டான சிக்கல் - சமாளிக்க என்ன செய்ய வேண்டும்??

விஜயநேத்ரன்

ஐபிஎல் புதிய ரென்டென்சன் விதி அறிவிப்பு : சிஎஸ்கே விற்கு தோனி ஆடுவதை உறுதி செய்த பிசிசிஐ - மற்ற அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் விவரம்

மித்ரன்

ஐபிஎல் 2021 : காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனை - முதல் அணியாக ப்ளேஆப்பிற்குள் நுழைந்தது சென்னை

மித்ரன்

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் ஆர்சிபி கோப்பையை வெல்லுமா "இ சாலே கப் நம்தே"

மித்ரன்

நடப்பு ஐ.பி.எல் தொடரின் புதிய போட்டி அட்டவணை வெளியானது : முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதல்