Nigazhvu News
23 Nov 2024 8:19 AM IST

Breaking News

ஐபிஎல் 2022: வீரர்களை தக்க வைப்பிற்கு பின்னால் நடந்த கதை: மொயின் & சூர்யாவின் விஸ்வாசமும், பாண்ட்யா & ராகுலின் பேராசையும்

Copied!
Nigazhvu News
ஐபிஎல் 2022: வீரர்கள் தக்க வைப்பிற்கு பின்னால் நடந்த கதைமொயின் & சூர்யாவின் விஸ்வாசமும், பாண்ட்யா & ராகுலின் பேராசையும்

ஐபிஎல் 2022 போட்டித் தொடருக்காக முந்தைய தொடரில் விளையாடிய  8 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துள்ள (Retained) வீரர்களை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக 4 முதல் குறைந்த பட்சம் 2 வீரர்கள் வரை அணிகள் தக்க வைத்துள்ளன.

அணியில் வீரர்களைத் தக்க வைப்பதில் முக்கிய விதி என்னவென்றால், அதற்கு அந்த குறிப்பிட்ட வீரரின் சம்மதம் வேண்டும். தொடர்ந்து அந்த அணியில் ஆடவோ, அந்த தொகைக்கு விருப்பம் இல்லாமலோ இருந்தாலோ அல்லது நேரடியாக ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பினாலோ அவர் அணியிடம் தனது விருப்பத்தைக் கூறி தக்க வைப்பதில் இருந்து விலகிக் கொள்ளலாம்.  அது எவ்வாறு ஒவ்வொரு அணியையும் பாதித்துள்ளது என்பதை பார்க்கலாம். 

மும்பை இந்தியன்ஸ் : மும்பை அணியின் முதல் மூன்று தேர்வுகள்  ரோகித், பும்ரா, போலார்டு என்பது எளிதான தேர்வாக இருந்தது. ஆனால் நான்காவது வீரர் யார் என்பதில் பெரும் போராட்டமே நடந்தது.  சூர்யகுமார் யாதவ், பாண்ட்யா மற்றும் இஷான் கிஷன் இடையே நிலவிய இந்தப் போட்டியில் இறுதியாக சூர்யகுமார்  யாதவ்வின் பெயரை அறிவித்துள்ளது மும்பை. ஆனால் மும்பை அணியின்  நான்காவது வீரருக்கான முதல் தேர்வு  இஷான் கிஷன் அல்லது ஹார்திக் பாண்ட்யா இருவரில் ஒருவராகத்தான்  இருந்தது. 


ஆனால் இந்தத் தேர்விற்கு பின்னால் நடந்தது என்னவென்றால் நான்காவது வீரராக 6 கோடி மட்டுமே வழங்கப்படும் என்பதே. இதை ஏற்றுக்கொள்ள இஷான் கிஷன் மற்றும் பாண்ட்யா விரும்பவில்லை என்பதே. இதை சரிசெய்ய போலார்டிடம் பேசிய நிர்வாகம் அவரை நான்காவது வீரராக ஒப்பந்தம் செய்து, மூன்றாவது ஆப்சனான 8 கோடியை அவர்களுக்கு வழங்கியது‌

ஆனால் அதிலும் அவர்கள் திருப்தியடையவில்லை எனத் தெரிகிறது. அதனால் வேறுவழியின்றி சூர்யகுமாரின் பக்கம் கவனத்தை திருப்ப, அவர் எவ்வித நிபந்தனையும் இன்றி சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மும்பை அணிக்கு தனது விஸ்வாசத்தை உணர்த்தியுள்ளார். அதே நேரத்தில் ஹார்திக் பாண்ட்யா தனது சொந்த மாநில அணியான அகமதாபாத் அணிக்கா ஆட விரும்பியதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.


மும்பை அணியில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ள பாண்ட்டியா தனது ட்விட்டர் பக்கத்தில், "மும்பை அணியுடனான என் பயணத்தின் இந்த நினைவுகளை என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் சுமந்து செல்வேன், என் வாழ்நாள் முழுவதும் இந்த தருணங்களை என்னுடன் எடுத்துச் செல்வேன். இங்கு நான் உருவாக்கிய நண்பர்கள், உருவான பந்தங்கள், மக்கள், ரசிகர்கள், நான் , அவர்களுக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் ஒரு வீரனாக மட்டுமல்ல.. ஒரு சாதரண நபராக, பெரிய கனவுகளுடன் ஒரு இளைஞனாக இங்கு வந்தேன்: நாங்கள் ஒன்றாக வென்றோம், ஒன்றாகத் தோற்றோம், ஒன்றாகப் போராடினோம். இந்த அணியுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் இதயத்தில் ஒரு தனி இடம் உண்டு. எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள் " என்று பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ்:  மற்ற அணிகள் தேர்வு செய்யும் வீரர்களை வம்படியாக வாங்கிக் குவிக்கும் வழக்கம் உள்ள பஞ்சாப் அணி,அவர்களை சரியாக பயன்படுத்தும் தவறுவதோடு, அடுத்த தொடரில் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் பஞ்சாப், இந்த முறையும் அதே வேலையைத் தொடர்ந்துள்ளது. ஆரம்பத்தில் யாரையும் தக்க வைப்பதில்லை என்று செய்திகள் வந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி மாயங்க் அகர்வால் மற்றும் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங்கை தக்க வைப்பதாக அறிவித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ்.

பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் அந்த அணியில் விளையாட விரும்பவில்லை என தெரிவித்ததாக செய்திகள் கசிந்துள்ளது. தங்களின் அனுமதியின்றி அவரை லக்னோ அணி 20 கோடிக்கு விலை பேசியதால் தான்,  பஞ்சாப் அணியில் இருந்து அவர் விலகியதாக பஞ்சாப் உரிமையாளர்கள் ஐபிஎல் கவுன்சிலிடம் புகார் தெரிவித்துள்ள நிலையில், அது பற்றிய விசாரணை நடந்து வருகிறது. இது நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஓராண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படும். லக்னோ அணி மீதும் நடவடிக்கை பாயலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:  ஆரம்பத்தில் இருந்தே சென்னை அணி தோனியை தக்க வைப்பதில் உறுதியாக இருந்தது. அதனால் தோனியின் விருப்பப்படி  ஜடேஜாவை 16 கோடிக்கு தேர்வு செய்த அணி நிர்வாகம், தோனியை 12 கோடிக்கு டிக் செய்ய விரும்பியது.. அடுத்த இரண்டு வீரர்களாக ருத்துராஜ் மற்றும் மொயின் அலியைத் தேர்வு செய்த சென்னை நிர்வாகிகள் அவர்களிடம் இது குறித்து பேசியுள்ளனர்.


ஆனால் இருவரிடம் இருந்து ஒரே பதில்தான் வந்துள்ளது. "நாங்கள் சென்னை அணியில் ஆடுவதையே விரும்புகிறோம். எங்களை எந்தத் தொகைக்கு தேர்ந்தெடுந்தாலும் கவலையில்லை. அணியின் நலனுக்கு உறுதுணையாக இருப்போம் " என்று தங்களின் அன்பை வெளிப்படுத்த, சென்னை நிர்வாகிகள் பூரிப்படைந்துள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :  யாரும் எதிர்பார்க்காத வகையில் கேன் வில்லியம்சனோடு, காஷ்மீரைச் சேர்ந்த இளம் வீரர்களான அதிரடி வீரர் அப்துல் சமாத் மற்றும் இளம் புயல் உம்ரான் மாலிக் ஆகியோரைத் தக்க வைத்துள்ளதாக அறிவித்து ஆச்சரியம் அளித்தது. ஏற்கனவே வார்னருடன்  ஏற்பட்ட பிரச்சனைகளால், அவர் ஹைதராபாத் அணிக்கு ஆடமாட்டார் என்று தெரிந்த நிலையில், ரசித்கானை தக்க வைக்காமல் இருந்தது பலருக்கும் வியப்பை உண்டாக்கியது‌.

ஆனால் உண்மை என்னவென்றால், ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சனை முதல் நபராக தேர்ந்தெடுத்த நிலையில், இரண்டாவது வீரராக ரசித்கானை தேர்வு செய்தது‌. ஆனால் தன்னை முதல் வீரராக தேர்வு செய்யும்படி ரசித்தான் நிர்பந்தித்தாகத் தெரிகிறது. அணி நிர்வாகத்திற்கும், ரசித்கானிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். அதே வேளையில் ரசித்கானையும் 16 கோடிக்கு லக்னோ நிர்வாகிகள் பேசியுள்ளதாக,  ஹைதராபாத் அணியும் லக்னோ மீது புகார் தெரிவித்துள்ளது. அதுவும் விசாரணையில் உள்ளது. உண்மையென்று நிரூபணமானால், ராகுலைப் போன்று இவரும் ஐபிஎல்லில் இருந்து ஓராண்டு தடை செய்யப்படலாம்.

இது போன்ற காரணங்களால், ராஜஸ்தான் அணியில் இருந்த போது, மும்பை அணியுடன் பேசியதாக ஜடேஜா ஓராண்டு காலம் தடைசெய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பயிற்சியின்கீழ் மெருகேறிய டெல்லி, இளம் வீரர்களைக் கொண்டு தங்கள் அணியை கட்டமைத்து வந்தது‌. அதனால் ரிஷாப் பண்ட், அக்சர் பட்டேல், ப்ரித்வி ஷா ஆகியோருடன் வேகத்தில் மிரட்டிய ஆன்ட்ரிக் நோர்க்கியாவை தக்க வைத்துள்ளது டெல்லி அணி. அஸ்வின், ஷிகார் தவானோடு, இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரையும் விடுவித்துள்ளது.


காயம் காரணமாக  முந்தைய தொடரின் பாதியில் இருந்து வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர், இந்த ஆண்டு அணிக்கு திரும்பினாலும் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்ததாகத் தெரிகிறது. இன்னும் சில பிரச்சனைகளும் எழுந்ததால், அணியிலிருந்து விலக ஸ்ரேயாஸ் ஐயர் விரும்பியதால் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளன.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்:
டிவில்லியர்ஸ் ஓய்வை அறிவித்த நிலையில், கோலி மற்றும் மேக்ஸ்வெல் லை தக்க வைத்த பெங்களுரூ, கடைசி நேரத்தில் கோலியின் செல்லப்பிள்ளை முகமது சிராஜ்ஜின் பெயரையும் அதில் இணைத்துள்ளது‌. வெறும் மூன்று பேரை மட்டுமே தக்க வைத்துள்ள பெங்களூர் அணி, கேப்டனுக்கான தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளது.


ஹர்ஷல் பட்டேல், தேவ்துத் படிக்கல் மற்றும் சாஹல் ஆகியோரை தக்க வைக்காதது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் அவர்கள் ஏலத்திற்கு சென்றால், இன்னும் அதிக தொகைக்கு விலை போகலாம் என்று விரும்பியதால்தான், பெங்களூர் அணியில் தக்க வைக்க முடியவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ்: இளம் நட்சத்திரங்களின் களமாக விளங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கடந்த ஒரு சில சீசன்களாக வெளிநாட்டு வீரர்களை நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் சஞ்சு சாம்சனை கேப்டனாக்கியதோடு, அவரை முதல் வீரராகத் தக்கவைக்கவும் செய்துள்ளது இராஜஸ்தான் ‌. அவரோடு அதிரடி விக்கெட்கீப்பர் பட்லரையும், இளம் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வாலையும் தக்க வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸை அணியில் இருந்து விடுவித்துள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் காயத்திலிருந்து மீண்டு வராத ஆர்ச்சர் மற்றும் நீண்ட நாட்களாக ஆடாத பென் ஸ்டோக்ஸ் நம்பி களமிறங்குவது சரியான முடிவாக இருக்காது என்று தீர்மானத்து பட்லரை மட்டும் தக்க வைத்துள்ளதாகத் தெரிகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:  வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திரங்கள் ஆன்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரேனோடு இந்தியாவின் இளம் நட்சத்திர வீரர்கள்  வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரை தக்க வைத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.


தினேஷ் கார்த்திக், மார்கன், பெர்குசன், சுப்மன் கில், ரானா பல நட்சத்திர வீரர்களை விடுவித்துள்ளதால், மீண்டும் அவர்களை எடுக்க முயற்சிக்கும் எனத் தெரிகிறது. அதேவேளை சுப்மன் கில்லின் டி20 ஃபார்ம்  சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதும் அவர்கள் மனதில் இருக்கும்.

இவரை அணியில் இருந்து விடுவித்து இருக்கக் கூடாது என்று நீங்கள் நினைக்கும் வீரர் யார்.? என்று உங்கள் கருத்துக்களைப் பதிவிடலாம்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

பிப்ரவரி 12,13ல் பெங்களுரூவில் நடக்கிறது ஐபிஎல்லின் பிரமாண்ட மெகா ஏலம் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப்பட்டியல் ஜனவரி இறுதிக்குள் உறுதி

ஐபிஎல் 2022: களமிறங்கும் முன்பே நரித்தனம் செய்த லக்னோ அணி - புகார் செய்த மற்ற அணிகள்

Copied!
மித்ரன்

ஐபிஎல் : புதிய அணிகளின் வருகையில் பழைய அணிகளுக்கு உண்டான சிக்கல் - சமாளிக்க என்ன செய்ய வேண்டும்??

விஜயநேத்ரன்

ஐபிஎல் புதிய ரென்டென்சன் விதி அறிவிப்பு : சிஎஸ்கே விற்கு தோனி ஆடுவதை உறுதி செய்த பிசிசிஐ - மற்ற அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் விவரம்

மித்ரன்

ஐபிஎல் 2021 : காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனை - முதல் அணியாக ப்ளேஆப்பிற்குள் நுழைந்தது சென்னை

மித்ரன்

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் ஆர்சிபி கோப்பையை வெல்லுமா "இ சாலே கப் நம்தே"

மித்ரன்

நடப்பு ஐ.பி.எல் தொடரின் புதிய போட்டி அட்டவணை வெளியானது : முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதல்