ஐபிஎல் 2021 : காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனை - முதல் அணியாக ப்ளேஆப்பிற்குள் நுழைந்தது சென்னை
ஷார்ஜாவில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றது.
ஐபிஎல் 2021ன் இரண்டாம் பகுதி ஆட்டங்கள் யு.ஏ.இல் நடைபெற்று வருகிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் ஷார்ஜாவில் இன்று மோதின.
டாஸ் வென்ற தோனி ஐதராபாத் அணியை பேட்டிங் செய்யப் பணித்தார். ஆரம்பம் முதலே தடுமாறிய அந்த அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும், பிராவோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த இலக்கை துரத்திய சென்னைக்கு டூபிளஸ்ஸி 41 ரன்களும் மற்றும் ருத்துராஜ் 45 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடிய அம்பதி இராயுடு சென்னையை வெற்றி பெற வைத்தார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனி வெற்றிக்குத் தேவையான கடைசி ரன்னை சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்தது சென்னை இரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.
இதன்மூலம் 11 ஆட்டங்களில் 9 வெற்றி பெற்ற சென்னை, 18 புள்ளிகளுடன் முதல் அணியாக ப்ளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றது. கடந்த சீசனில் சென்னை முதல் முறையாக ப்ளேஆப்பிற்கு தகுதி பெறாமல் போனது குறிப்பிடத்தக்கது
உங்கள் கருத்தை பதிவிடுக