Nigazhvu News
20 Apr 2025 9:52 AM IST

வாடிவாசல் திரைப்படத்தின் அசத்தலான டைட்டில் போஸ்டர் வெளியீடு

Copied!
Nigazhvu News

வாடிவாசல் திரைப்படத்தின் அசத்தல் டைட்டில் போஸ்டர்   வெளியீடு 

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர்  வெளியாகி உள்ளது. அசத்தலான வடிவமைப்பில் வெளியாகி உள்ள டைட்டில் போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

அசுரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்குவதாக செய்திகள் வெளியாகின. அதனை உறுதிசெய்த படக்குழு வாடிவாசல் எனப் பெயரிட்டு புகைப்படம் வெளியிட்டனர். அதில் சிந்து சமவெளி நாகரீகக் குறியீடுகள் அதிகம் இருந்ததால், படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமானது.

அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு  இன்று மாலை வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில்  லுக்  வெளியிடப்படும் என்று ட்வீட் செய்திருந்தார். இதனால் இரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை, சரியாக  மாலை 5:30 மணிக்கு, அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

அதில் "நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பேரின்பமும் பெருமையும் கொள்கிறேன்" என்று தலைப்பிட்டுள்ளார்


இப்படத்தில் ஜல்லிக்கட்டை மையமாக உள்ள இக்கதையில், சூர்யா இருவேடங்களில் நடிப்பதாகவும், அதிலொன்று வரலாற்று காலத்தில் நடக்கும் சம்பவங்கள் என்றும்  செய்திகள் கசிந்தன. அதை மெய்ப்பிக்கும் வகையில், இரும்புக்காலத்தைக் குறிக்கும் விதத்தில், டைட்டில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜல்லிக்கட்டு காளையின் உருவம் மட்டும் இடம்பெற்றுள்ளது  

வி கிரியேசன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

வாடி வாசல் லுக்கில் சூர்யா பிறந்தநாள் காமன் டிபி வெளியீடு

நடிகர் விஜய்க்கு 1 லட்சம் அபராதம் - உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

Copied!
மித்ரன்

சிம்புவின் மாநாடு மீண்டும் தள்ளிவைப்பு - சுரேஷ் காமாட்சி அறிவிப்பு

மித்ரன்

ஜெய்பீம் திரைப்பட விவகாரம் : சூர்யாவிற்கு பெருகும் ஆதரவு - சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் #WeStandWithSuriya

மித்ரன்

"ஜெய்பீம்" படக்குழுவினர் மீது வழக்கு : பிரச்சனையை விஸ்வரூபமாக்கும் வன்னியர் சங்கம்

மித்ரன்

விஜய்சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் பர்ஸ்ட் லுக் வெளியீடு

மித்ரன்

சூர்யாவின் "ஜெய்பீம் " - மனமுருகிய முதல்வர் ஸ்டாலின்