Nigazhvu News
20 Apr 2025 1:31 AM IST

பொற்காலம் மீண்டும் வருகிறது : வந்தியத்தேவன் கார்த்தி வெளியிட்ட ’பொன்னியின் செல்வன்’ புதிய போஸ்டர்

Copied!
Nigazhvu News

பொற்காலம் மீண்டும் வருகிறது’ : வந்தியத்தேவன் கார்த்தி வெளியிட்ட ’பொன்னியின் செல்வன்’ புதிய போஸ்டர்

பொற்காலம் மீண்டும் வருகிறது என்று மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றினை, அப்படத்தின் நாயகன் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

பலருக்கும் எட்டாக்கனியாக இருந்து வந்த,  கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கும் வெள்ளித்திரைக் கனவிற்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். 

இசைப்புயல் ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா பச்சன், த்ரிஷா எனப் பெரும் நட்சத்திரங்களை வைத்து 2019ல்  தொடங்கப்பட்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாக மணிரத்னம் தெரிவித்திருந்தார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவல் முடிந்தும் தொடங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

பாகுபலி போன்று இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று செய்திகள் வெளியாகி இருந்தது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் PS1 என்ற புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது . அதில் படம் 2022ல் திரையரங்கில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனை வந்தியத்தேவனாக நடிக்கும் நடிகர் கார்த்தி  பொற்காலம் மீண்டும் வருகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எதிர்பாராத நேரத்தில் வெளிவந்து மகிழ்ச்சியளித்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின்  போஸ்டரைக் கண்டு ரசித்த, பொன்னியின் செல்வன் ரசிகர்கள் அதனை ட்ரெண்டு செய்து மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சார்பட்டா பரம்பரை : படம் எப்படி இருக்கு

வாடி வாசல் லுக்கில் சூர்யா பிறந்தநாள் காமன் டிபி வெளியீடு

Copied!
மித்ரன்

சிம்புவின் மாநாடு மீண்டும் தள்ளிவைப்பு - சுரேஷ் காமாட்சி அறிவிப்பு

மித்ரன்

ஜெய்பீம் திரைப்பட விவகாரம் : சூர்யாவிற்கு பெருகும் ஆதரவு - சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் #WeStandWithSuriya

மித்ரன்

"ஜெய்பீம்" படக்குழுவினர் மீது வழக்கு : பிரச்சனையை விஸ்வரூபமாக்கும் வன்னியர் சங்கம்

மித்ரன்

விஜய்சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் பர்ஸ்ட் லுக் வெளியீடு

மித்ரன்

சூர்யாவின் "ஜெய்பீம் " - மனமுருகிய முதல்வர் ஸ்டாலின்