Nigazhvu News
17 Mar 2026 3:14 AM IST

புதிய மத்திய அமைச்சரவையில் எல்.முருகனுக்கு முக்கியத் துறைகளை வழங்கிய மோடி :

Copied!
Nigazhvu News

மத்திய அமைச்சரவையில் எல்.முருகனுக்கு  முக்கியப் பொறுப்புகளை வழங்கிய மோடி 

நேற்று விரிவாக்கப்பட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தமிழக பாஜக தலைவர் எல். முருகனுக்கு மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை & தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பதவி விலகிய 12 அமைச்சர்களுடன், பல்வேறு அமைச்சர் பதவிகளுக்கான இடங்களும் காலியாக இருந்தது. இதனையடுத்து புதிதாக 36 அமைச்சர்கள் உள்பட 43 பேர் நேற்று மாலை  குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அதில்  ஏற்கனவே இணை அமைச்சர்களாக இருந்த 7 பேருக்கு கேபினட் அமைச்சர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் 21 ஆக இருந்த மத்திய கேபினட் அமைச்சர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 23 ஆக இருந்த இணைஅமைச்சர்களின் எண்ணிக்கையும் 45 ஆக உயர்ந்துள்ளது. ஆனால்  இணை அமைச்சர் தனிப்பொறுப்பில் இருந்தவர்கள் 9-ல் இருந்து 2 ஆகக் குறைந்துள்ளது.

வட மாநிலங்களில் விரைவில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உத்திரபிரதேசம் மற்றும் குஜராத்தை சேர்ந்தவர்களுக்கு புதிய அமைச்சரவையில் அதிக இடங்களை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் நேற்றுப் பதவியேற்ற அமைச்சர்களின் பதவி விவரங்கள் வெளிவந்துள்ளது.

எல்.முருகனுக்கு இருதுறைகள்: 

நேற்று இணை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட தமிழகப் பா.ஜ.க தலைவரான எல்.முருகனுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறையுடன், தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களைப் போலவே முருகனும் விரைவில் ராஜ்யசபா எம்.பியாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "தமிழகம் முதல் மாநிலமாக அனைத்து வகையிலும் உறுதுணையாய் இருப்பேன்" எனத் தெரிவித்தார். கடந்த  தமிழக சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றதையடுத்து இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

திரைப்படத்துறையில் கடும் எதிர்ப்பைத் கிளப்பியுள்ள புதிய  ஒளிப்பதிவு திருத்த சட்டம் தகவல் ஒளிபரப்புத் துறையின் கீழ் வருவதால், அதை எதிர்கொள்வது இவரது முதல் பணியாக இருக்கும்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அறிவிக்க தனி இணையதளம் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Copied!
மித்ரன்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு' - முதல்வர் ஸ்டாலின்

மித்ரன்

தமிழகத்திற்கு மீண்டும் ரெட் அலார்ட்டா??: வங்கக்கடலின் அந்தமான் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

மித்ரன்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

மித்ரன்

கொரோனாவின் கோரதாண்டவத்தை புகைப்படம் எடுத்து உலகறிய செய்த தானிஷ் சித்திக் ஆப்கானில் படுகொலை

மித்ரன்

பா.ஜ.க அரசு கொண்டு வந்த உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ. 3000 கோடி இழப்பு: சபாநாயகர் அப்பாவு