Nigazhvu News
20 Apr 2025 9:20 PM IST

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை சந்தித்தார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Copied!
Nigazhvu News

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அவருடைய இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனா நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதன்போது அவருடன் திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக முதல்வரை எல்.கே. சுதீஷ் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். 

பின்பு முதல்வருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய விஜயகாந்த், கொரோனா நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரிடம் வழங்கினார். பின்னர் 15 நிமிடங்கள் தொடர்ந்த இந்த சந்திப்பில், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இனி தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் அதிமுக பங்கேற்காது - ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டறிக்கை

தமிழகத்திற்கு புதிய ஆளுநர் - ரேசில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்

இராதேயன்

சாத்தான்குளத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

இராதேயன்

"தமிழனை மன்னிப்பு கேட்க வைத்ததால் இன்று நாடே பற்றி எரிகிறது" - விளாத்திகுளத்தில், கடம்பூர் ராஜூ பேச்சு!

இராதேயன்

திமுக 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு நிர்வாகிகள் வீடுகளில் திமுக கொடியேற்றி கொண்டாட எம்எல்ஏ சண்முகையா அழைப்பு