
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவைகுளம் புதியம்புத்தூர் ஓட்டப்பிடாரம் ஓசநூத்து அக்கநாயக்கன்பட்டி மருதன் வாழ்வு அயிரவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது கனிமொழி எம்பி புதியம்புத்தூர் பஜாரில் பேசுகையில்,
உங்களுடைய அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக உங்களுடைய பிரதிநிதியாக எனக்கு வாக்களித்து இருக்கக்கூடிய உங்கள் அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நம்முடைய முதலமைச்சர் தலைவர் கலைஞரின் வழியிலே மக்களுக்கு தந்திருக்க கூடிய வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி தரக்கூடிய முதலமைச்சராக இருக்கிறார் மேலும் முதலமைச்சர்களிலேயே முதலமைச்சராக இருக்கிறார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு பட்ட படிப்புகள் படித்து முடிக்கும் வரை புதுமைப்பெண் திட்டம் மூலம் ரூபாய் ஆயிரம் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது அதே போல் மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் புதல்வன் திட்ட மூலம் வங்கி கணக்குகளில் ரூபாய் 1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு சிற்றுண்டி திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலாக தொடங்கி இருக்கக்கூடிய முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் நீண்ட நாட்களாக புதியம்புத்தூரில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது சமீபத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளிப் பூங்கா சம்மந்தமாக கூட்டம் நடத்தி இருக்கிறோம் எனவே புதியம்புத்தூரில் விரைவில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார் நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா ஓட்டப்பிடாரம் யூனியன் ஜெர்மன் ரமேஷ் தலைமை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர் மணி வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக