Nigazhvu News
20 Apr 2025 8:30 AM IST

"தமிழக வெற்றிக் கழகம்" கொடி அறிமுகமானதை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே இனிப்புகள் வழங்கி கொண்டாடிய கட்சியினர்!

Copied!
Nigazhvu News

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை கட்சியின் தலைவர் விஜய் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற அறிமுக விழா நிகழ்ச்சியில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி, கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி கட்சி நிர்வாகிகளிடம் சிறப்புரையாற்றிய உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.




இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த கட்சியினர் புதூர் ஒன்றிய பொறுப்பாளர் செண்பகக்கனி தலைமையில், கட்சி கொடியை பொதுமக்களிடம் காட்டி த.வெ.க கட்சிக்கொடி அறிமுகமான செய்தியை மகிழ்ச்சி பொங்க கூறி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கடை வியாபாரிகள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.




மேலும், அங்கிருந்த ஆட்டோக்களில் அமர்ந்து கொண்டு தமிழக வெற்றி கழகத்தின் கொடியை பொதுமக்களிடம் காட்டி, தங்களது கட்சிக்கொடியை தலைவர் விஜய் அறிமுகம் செய்துவிட்டார்.. என்பதை விளக்கி தொடர்ந்து அங்கிருந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்வில், விளாத்திகுளம் தொகுதி தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர்கள் பிரவீன்குமார், மணிகண்டன், அருள்ராஜ், ரவிச்சந்திரன், சந்திரன், அழகுராஜ், முனிஸ்வரன், ராமகிருஷ்ணன், கபாலீஸ்வரன், விஜயகுமார் உட்பட கட்சியினர் ஏராளமானோர் கட்சிக்கொடி அறிமுகமானதை கொண்டாடினர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

புதியதாக எத்தனை கட்சிகளும் வந்தாலும் பரவாயில்லை - முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

புதியம்புத்தூரில் விரைவில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் புதியம்புத்தூரில் கனிமொழி எம்பி பேச்சு

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்

இராதேயன்

சாத்தான்குளத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

இராதேயன்

"தமிழனை மன்னிப்பு கேட்க வைத்ததால் இன்று நாடே பற்றி எரிகிறது" - விளாத்திகுளத்தில், கடம்பூர் ராஜூ பேச்சு!

இராதேயன்

திமுக 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு நிர்வாகிகள் வீடுகளில் திமுக கொடியேற்றி கொண்டாட எம்எல்ஏ சண்முகையா அழைப்பு