
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 72 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுதும் தேமுதிகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதில் ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டி மற்றும் பதுவா முதியோர் இல்லம் மற்றும் கேகைலாசபுரம் ரோசரி முதியோர் இல்லம் ஆகிய இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு தேமுதிக தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் தேமுதிக கட்சியினர் மதிய உணவினை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜன்,மாநகர் மாவட்ட பொருளாளர் விஜயன், மாவட்டத் துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் லாரன்ஸ், ஒன்றிய அவைத்தலைவர் முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் திருமணி முருகன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பிச்சைமணி, முத்துவேல், பவுல்ராஜ், l,மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக