
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பின்வரும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
- பாதயாத்திரை வரும்போது சாலையில் வலது புறமாக நடந்து செல்ல வேண்டும். இடது புறமாக நடந்து செல்வதால் வாகனங்கள் பக்தர்கள் மீது மோத வாய்ப்பு உள்ளது.
- பாதயாத்திரை வரும்போது முதுகு பகுதி மற்றும் தோல் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொள்ள வேண்டும். இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு பக்தர்கள் எளிதில் தெரிவார்கள்.
- பாதயாத்திரை வரும்போது ஜாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள் அணிந்து வரக்கூடாது. அதேபோல் முகத்தில் வர்ணம் பூசி வரக்கூடாது.
- பாதயாத்திரை வரும்போது வாகனங்களில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி முருகக் கடவுள் போன்ற கடவுள் புகைப்படங்கள் தவிர வேறு எந்தவொரு புகைப்படங்களையும் பேனர்கள் வைத்து வரக்கூடாது.
- பாதயாத்திரை வரும்போது பக்திப்பாடல்கள் தவிர ஜாதி ரீதியான பாடல்கள் அல்லது சினிமா பாடல்களை இசைக்கவோ ஒலிக்கவோ கூடாது.
- வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை கோவிலுக்கு எடுத்து வரக்கூடாது.
இந்த அறிவுறுத்தல்களை மீறி செயல்படும் பக்தர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
பாதயாத்திரை பாதுகாப்பான பயணமாக அமைவதற்கு அனைத்து பக்தர்களும் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
உங்கள் கருத்தை பதிவிடுக