Nigazhvu News
24 Jun 2024 5:43 PM IST

Breaking News

Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி ஸ்டெர்லைட்டை இழுத்து மூட, தமிழர் விடியல் கட்சி கோரிக்கை.

Copied!
Nigazhvu News

2018 மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் எதிரான மிகப்பெரிய போராட்டத்தில் 15 உயிர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டும், ஆயிரத்திற்கும் அதிகமான பேருக்கு கை கால்கள் முடக்கப்பட்டும், உடைமைகள் நொறுக்கப்பட்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை அன்றைய எடப்பாடி அரசு முடிவுக்கு கொண்டு வந்தது.

அவை தொடர்ந்து 2019 ஆம் வருடம் இந்திய நாடாளுமன்ற தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் அன்றைய திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. அப்போது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திருமதி கனிமொழி அவர்கள் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது. திருமதி கனிமொழி அவர்களும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற தூத்துக்குடி தொகுதியில் உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் கண்டிப்பாக ஸ்டெர்லைட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உறுதியாக இழுத்து மூடுவதற்கு தேவையான ஆவணங்களை செய்வேன் என்றும் உறுதி அளித்தார். ஆனால், ஐந்து வருடங்கள் நிறைவடைந்து விட்டது அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வந்துவிட்டது இன்னும் ஸ்டெர்லைட் ஒரு முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை.

திமுகவில் திருமதி கனிமொழி அவர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் ஏமாற்றப்பட்டார்களா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் பரவலாக நிலவி வருகிறது.

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலும் வந்தது. அதிலும் திமுகவின் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், இன்றைய தமிழ்நாடு முதலமைச்சருமான
திரு மு.க. ஸ்டாலின் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் எங்கெங்கெல்லாம் பிரச்சாரத்திற்கு செல்கிறாரோ அங்கெல்லாம் ஸ்டெர்லைட்டை இழுத்து மூடுவதற்கு அரசு கொள்கை முடிவு எடுக்கும் என்று கூறி வந்தார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடந்த மிகப்பிரமாண்டமான பொதுக்கூட்டத்திலும் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை ஸ்டெர்லைட்டை இழுத்து மூடுவதற்கு எந்த விதமான அரசு கொள்கை முடிவும் எடுக்கவில்லை. கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்து விட்டதா? அல்லது கானல் நீராக மறைந்து விட்டதா? இதுவும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

ஆக மொத்தத்தில் குறிப்பாக, ஸ்டெர்லைட்டுக்கு எதிரான அல்லது ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக இந்த மண்ணை விட்டு விரட்டி அடிப்பதற்கு அதிமுக கட்சியோ, திமுக கட்சியோ, அல்லது தலைமை இடத்தில் இருக்கும் அணில் அகர்வால் நண்பருமான ஒன்றிய அரசோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அன்பிற்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்ட தூத்துக்குடி மக்கள் இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி இதுவரை பொறுமை காத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்திய விடுதலைப் போராட்டத்தில் தூத்துக்குடி  மண்ணில் பிறந்த வீரர்கள் எத்தகைய போர்க்குணம் கண்டு விடுதலை வேட்கையை அடைந்தார்களோ!, அவர்களுடைய கொள்கை வாரிசுகளாக தூத்துக்குடி மண்ணில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
தனது உயிரை கொடுத்தாவது இந்த தூத்துக்குடி மண்ணை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியோடு மக்கள் இன்னும் பொறுமை காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மீண்டும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய போராட்டத்தை மக்கள் முன்னெடுப்பதற்கு முன்பாக ஸ்டெர்லைட்டை இழுத்து மூடுவதற்கு இனியாவது திமுக அரசு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட்டை இழுத்து மூடுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்பதை காட்டி கடந்து போகக்கூடாது. ஒரு அரசு கொள்கை முடிவு எடுத்து எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாம் கண்டோம். அந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அரசு கொள்கை முடிவு எடுத்ததினால் உச்ச நீதிமன்றமே அதற்கு எதிராக இருக்கவில்லை. ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உறுதி செய்தது. ஜல்லிக்கட்டு இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மிக முக்கிய சாராம்சமான தமிழ்நாடு அரசு வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான கொள்கை முடிவு எடுத்து மக்களை மகிழ்ச்சியில் ஆற்ற வேண்டும் என்று தூத்துக்குடி பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அவர்களுடைய ஓட்டுகள் மூலமாக பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி உறுதி.

தமிழக அரசே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று என்று

தமிழர் விடியல் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேமா. சந்தனராஜ் பாண்டியன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

முகநூல் பதிவுClick Here


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

11.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்

Copied!
இராதேயன்

விளாத்திகுளம் பேரூராட்சி சாலையம் தெருவில் ரூ.15-லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்

இராதேயன்

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் – மாவட்ட எஸ்பி அறிவிப்பு

இராதேயன்

வீ.க.ப.க.தலைவருடன் ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை நிர்வாகிகள் சந்திப்பு

வித்யா

தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022

மித்ரன்

விடுமுறை வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, நகர காவல்துறையினருக்காக தொடங்கப்பட்ட TN Police CLAPP விடுமுறை மொபைல் செயலி