தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சோலைராஜ்(31), இவர் தந்தை முருகன் மற்றும் தாய் அனந்தம்மாள் ஆகியோருடன் குடும்பத்துடன் சேர்ந்து இப்பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி விறகு கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று ஒரு மணி நேரம் கனமழை பெய்த கொண்டிருந்தபோது, மூட்டத்தில் இருந்த விரகுகள் தண்ணீரில் அடித்து செல்லக்கூடாது என்பதற்காக, வீட்டில் இருந்த சோலைராஜ் கரி மூட்டத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு பாத்தியமைக்க மழையில் நனைந்தபடியே சோலை ராஜ் மற்றும் தாய் அனந்தம்மாள் கரிமூட்டத்திற்கு வந்த போது, எதிர்பாராத விதமாக சோலைராஜ் மீது இடி, மின்னல் தாக்கியதில் சோலைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சோலைராஜ் உடலை மீட்டு பிரேத ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னே நடந்து சென்ற சோலைராஜ் மீது தாய் அனந்தம்மாள் கண்முன்னே இடி, மின்னல் தாக்கி மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக