Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முறையான அனுமதியின்றி குளத்து மண் அள்ளியதாக ஒரே நாளில் 27 டிராக்டர்கள் பறிமுதல். புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை.

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டத்தில் மண்பாண்ட தொழில் செய்வதற்கும், விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்கும் குளத்தில் வண்டல் மண் அள்ளிக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பல்வேறு வழிமுறைகளையும் வகுத்துள்ளது.

ஆனால் விவசாய நிலங்களுக்கும், மண்பாண்ட தொழிலுக்கும் பயன்படுத்தாமல் செங்கல்சூளைகளுக்கு மண் அள்ளுவதாக புகார் எழுந்து வந்தது.

இந்த நிலையில் செங்கல்சூளைகளுக்கு முறையான அனுமதி சீட்டு இன்றி வண்டல் மண் அள்ளி 10 டிராக்டர்களை ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக டிஎஸ்பியாக பொறுப்பேற்ற ராமகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் பிடித்து ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதே போல் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அனுமதிசீட்டு இன்றி வண்டல் மண் அள்ளி வந்த 17 டிராக்டர்களை டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனால் ஒரே நாளில் முறையான அனுமதி சீட்டு இல்லாமல் குளத்தில் வண்டல் மண் அள்ளிய 27 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

பேய்க்குளம் அருகே செட்டிகுளம் நூற்றங்கால் சாஸ்தா கோவிலில் ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா நடந்தது.

விளாத்திகுளம் அருகே தாய் கண் முன்னே மின்னல் தாக்கி மகன் பலி.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்