பேய்க்குளம் அருகே செட்டிகுளம் பூர்ண பொற்கலை சமேத ஸ்ரீ நூற்றங்கால் அய்யனார் சாஸ்தா கோவிலில் யக்ஞோபவீத யஜுர் உபகர்மா என்னும் ஆவணி அவிட்ட பூணூல் அணியும் விழா நடந்தது.
விழாவை காயல்பட்டினம் விஸ்வ பிராமண புரோகிதர் கோஹித் சர்மா தலைமை வகித்து மந்திரங்கள் ஜெபித்து விழாவை நடத்தினார். விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும் காயத்ரி ஹோமமும் நடந்தது.
விழாவில் சாத்தான்குளம், செட்டிகுளம், அம்பலசேரி, பேய்க்குளம் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான விஸ்வகர்மா சமூகத்தைச் சார்ந்தவர்கள் பூணூல் அணிந்து சிறப்பித்தனர். ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சங்கர குமார், பொருளாளர் நூற்றங்கால் ராஜா மற்றும் சின்னத்துரை ஆகியோர் செய்தனர்.

படம் புட் நோட்: பேய்க்குளம் அருகே செட்டிகுளம் நூற்றங்கால் சாஸ்தா கோவிலில் ஆவணிணர அவிட்டம் பூணூல் அணியும் விழா நடந்தது.
உங்கள் கருத்தை பதிவிடுக