முகாமுக்கு சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். சமுக ஆர்வலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். முகாமில் இடைச்சிவிளை டாக்டர் அரசுராஜா, இருதய மருத்துவர் கால்வின் டேவிட்சிங் ஆகியோர் பேசினர். அதில் அவர்கள் தற்போது உணவு பழக்கங்கள் மாறி போனது, இஞ்சி, சுக்கு போன்றவைகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டனர். கண்ட உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து தரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் தற்போது 18 வயதுடையவர்களுக்கும் மாரடைப்பு வருகிறது. ஆதலால் இருதயத்தை பாதுகாக்க நாம் தான் உறுதி பூளவேண்டும் என வலியுறுத்தினர். முகாமில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர். மருத்துவ சிகிச்சை அளித்து இலவசமாக மருந்து , மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இதில் தட்டார்மடம் காவல் உதவி ஆய்வாளர் பொன்னு முனியசாமி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆனந்த், சத்தியராஜ், ஊர் தலைவர் சக்திவேல்,தச்சன்விளை ஆனந்தன் , பனைவிளை குமாரவேல், சாத்தான்குளம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அப்பாத்துரை, கோயில் தர்மகர்த்தா செம்புலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
உங்கள் கருத்தை பதிவிடுக