தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் மாலை 3 மணி அவரை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதற்கிடையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தது.
அதைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, குருகாட்டூர், கோட்டூர், குரங்கணி, கடையனோடை, சாத்தான்குளம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேய்ச்சலுக்கு சென்ற ஆடு மாடுகள் ஆங்காங்கே ஒதுங்கி நின்றது.
மழையால் நாசரேத் சாத்தான்குளம் சாலையின் ஓரம் இருந்த மரம் ஒன்று காற்றில் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மதியத்திற்கு மேல் அவ்வப்போது மழை பெய்து வருவது சற்று குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
உங்கள் கருத்தை பதிவிடுக