ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் மேலமடம் பகுதியில் குண்டும் குழியுமான சாலை - தேங்கி நிற்கும் மழை நீர்- இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து செல்லும் அவலம்; மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் மேலமடம் பகுதியில் உள்ள சாலையானது இரு வருடங்களுக்கு மேலாக பழுதடைந்து தார் சாலை என தெரியாத நிலையில் இருந்து வருகிறது மேலும் கடந்த இரு தினங்களாக பெய்த மழை காரணமாக சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளங்களில் கீழே விழுந்து காயம் அடைந்து செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உடனடியாக புதியம்புத்தூர் மேலமடம் பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .


உங்கள் கருத்தை பதிவிடுக