கோவில்பட்டி மந்தி தோப்பு சாலையில் குண்டு குழியுமாக உள்ள சாலை சீர்யமைக்ககோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள காமராஜர் நகர் மேற்கு பகுதியில் சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும், மேலும் பி.ஆர்.எஸ். கார்டன் பகுதியில் உள்ள இரு சாலைகள் மேடு, பள்ளமாக இருப்பதால் அந்த வழியாக செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மந்திதோப்பு சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

உங்கள் கருத்தை பதிவிடுக