ஒட்டப்பிடாரம் அருகே வாஞ்சி மணியாச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 70 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவி மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். மேலும் வாஞ்சி மணியாச்சி ஜங்ஷன் வழியாக பெரும்பாலான ரயில்கள் வாஞ்சி மணியாச்சி ஜங்ஷனில் நின்று சென்ற நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு பெரும்பாலான ரயில்கள் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் நின்று சொல்வதில்லை.
இதனால் சுமார் 70 கிராமங்களை சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். மேலும் இது குறித்து தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று சென்னையில் தென்னக ரயில்வே உதவி மேலாளர் கௌசில் கிஷோரை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சந்தித்து, தற்போது ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட
திருநெல்வேலி - தூத்துக்குடி- (06668-06667) திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்,
வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்னர் நின்று சென்ற ரயில்கள் அனைத்தும் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவினை வழங்கினார். மேற்படி நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத பட்சத்தில் செப்டம்பர் 6 அன்று காலை 10 மணி அளவில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் சேர்ந்த பொதுமக்கள் முன்னிலையில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவிடுக