Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆடு வயலில் மேய்ந்த தகராறில் வாலிபரை வெட்டிக் கொன்ற அண்ணன், தம்பி உட்பட 4பேரை போலீசார் கைது செய்தனர்.

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தெப்பகுளம் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் கோபால் (25), விவசாயம் செய்து வருகிறார். மேலும் ஆடு மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அவரது ஆடு பக்கத்து வயலை மேய்ந்து விட்டதாம். இதனால் தோழப்பன் பண்ணை வடக்கு தெருவை சேர்ந்த உலகு மகன்கள் பாதாளம் (45), இசக்கி (43), இசக்கி மகன் உலகநாதன் (24), மணி மகன் ரமேஷ் (33) ஆகிய 4பேரும் அவரை அரிவாளால் வெட்டினார்களாம். 


இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.30 மணிக்கு இறந்தார். இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் கொலை வழக்குப் பதிந்து, பாதாளம், இசக்கி உட்பட 4பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே சந்திரகிரி விளக்கு பகுதியில் மாடு மீது இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பலி - ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை

வாஞ்சி மணியாச்சி ரயில்வே நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லாவிட்டால் செப்டம்பர் 6 ல் போராட்டம்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்