ஓட்டப்பிடாரம் அருகே கச்சேரி தளவாய்புரம் மேல தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி மனைவி விஜயலட்சுமி (54)என்பவர் தனது மகன் செந்தில்குமார் (32) என்பவருடன் நேற்று மாலையில் உறவினர் வீட்டு நிச்சியவிழாவில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சந்திரகிரி விலக்கு பகுதி அருகே சென்றபோது அந்த வழியாக மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மாடு மீது மோதி விபத்துக்குள்ளானதில் விஜயலட்சுமிக்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது இதை அடுத்து அருகில் இருந்தவர்கள் விஜயலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு விஜயலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விஜயலட்சுமி மகள் கார்த்திகா ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் இன்று அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவம்குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக