சட்டத்திற்கு புறம்பான பொதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பானது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவோடு இணைந்து தொடர் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஒன்பதாவது வாரமாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு (கூட்டு அறக்கட்டளை) சார்பில் சாத்தான்குளம் வட்டம் கொம்மடிக்கோட்டை சந்தோஸ் நாடார் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில் வைத்து போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கொம்மடிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ஜே. ராஜபுனிதா தலைமை வகித்தார். துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் எஸ். தனலெட்சுமி, தாயகம் அறக்கட்டளை இயக்குனர் வி. ஜெயகனி, நியூ பாசக்கனங்கள் முதியோர் இல்லத்தின் இயக்குனர் ஏ. முத்துப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ. ஷிபாஜினி அமுதா நோக்கவுரை ஆற்றினார். முன்னதாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவரும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கிரீன் கமிட்டி உறுப்பனருமான எம்.ஏ.தாமோதரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் ஒன்றிய சேர்மன் எஸ்.ஜெயபதி கலந்து கொண்டு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து விளக்கிப்பேசி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியானது விசுவாசபுரம், உடன்குடி ரோடு, அனுக்கிரகபுரம், கொம்மடிக்கோட்டை பிரதான சாலை வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. இப்பேரணியில் இளையோர் திருக்குறள் பேரவை நிறுவனர் ஆ. ஆதிநாராயணன், நியூ பாசக்கரங்கள் ஒருங்கிணைப்பாளர் எம். செல்வகுமார், சிகரம் அறக்கட்டளை முருகன், ஆசிரியர்கள், செல்வகுமார், முத்துக்கருப்பசாமி, தேவ ஸ்டாலின், அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் போதைப் பொருட்களுக்கு எதிராக அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக பள்ளியின் பசுமைபடை ஆசிரியர் கருணாகரன் சுந்தர் நன்றி கூறினார்.பேரணிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் எஸ்.சித்திரைக்குமார் மற்றும் பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகளும் செய்து இருந்தனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக