Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

Copied!
Nigazhvu News

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் வாக்கு சாவடி  அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி என்பது ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாத்தான்குளம் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கியதாகும். இம்மூன்று தாலுகாக்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள புதிய வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான பணிகள் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.




இப்பணிகளை மேற்கொள்ளும் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள்  மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வாக்காளர் விபரம்  கணக்கெடுப்பு  குறித்து பயிற்சி வகுப்பு ஸ்ரீவைகுண்டம்  தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார் தலைமை தாங்கி பேசுகையில், 

ஒவ்வொரு தேர்தலிலும் நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற லட்சியத்தை  அடைய வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்கள் நூறு சதவீதம் சரியாக இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதால் அப்ப பணிகளை மேற்கொள்ளும் வாக்காளர் நிலை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கான பணிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அப்பணிகளை முழு அர்ப்பணிப்போடு செய்து முடிக்க வேண்டும் என்றார் அவர். 




தேர்தல் துணை தாசில்தார் சுல்தான் சலாவுதீன் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில், வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கான பணிகள் குறித்த விபரங்கள் என்ன என்பது குறித்தும் வீடு தேடி சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்த்து புதிய வாக்காளர்களை சேர்ப்பது இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வது எவ்வாறு என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இக் கூட்டத்தில், தேர்தல் பிரிவு அலுவலர் பிரின்ஸ் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இடைச்சிவிளை பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை அளிப்பு.

அடிப்படை வசதிகளை அமைத்து தர வலியுறுத்தி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கெச்சிலாபுரம் மக்கள்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்