ஓட்டப்பிடாரம் அருகே கீழ அரசடி ஊராட்சி வெள்ளபட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 13.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிடத்தை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து பொதுமக்களிடையே பேசுகையில் வெள்ளபட்டியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் மற்றும் ஆர்சி நடுநிலை பள்ளிக்கு சமையல் கூடம் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

தொடர்ந்து துப்பாஸ்பட்டி கிராமத்தில் பொதுப்பணித்துறை மூலம் ரூபாய் 17.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணிகளை எம்எல்ஏ சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து துப்பாஸ்பட்டி கிராமத்திலிருந்து பனையூர் செல்லும் சாலையில் ரூபாய் 73.80 லட்சம் மதிப்பீட்டில் 1. 7 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய தார் சாலை அமைக்கும் பணிகளையும் பணி தொடங்கி வைத்தார்.

மேலும் துப்பாஸ்பட்டி வடக்கு கண்மாயில் கடந்த ஆண்டு பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட குளம் உடைந்து தண்ணீர் வெளியேறியது இதை அடுத்து ஒன்றிய பொது நிதி மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டநிதி ரூபாய் 23.75 லட்சம் மதிப்பீட்டில் கண்மாய் கரையை பலப்படுத்தி தடுப்பு சுவர் கட்டும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டாட்சியர் ஆனந்த் வட்ட வளர்ச்சி அலுவலர்கள் கிரி, வசந்தா, வருவாய் ஆய்வாளர் வாசுகி, அரசு ஒப்பந்தக்காரர் முருகன், பஞ்சாயத்து தலைவர் ராயப்பன், கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக