தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சோலைராஜ்(31) நேற்று முன்தினம் பெய்த மழையின் போது அவரது கரிமூட்டத்தில் மழைநீர் தேங்கி வரக்கூடாது என்பதற்காக கரிமூட்டத்தில் மழையில் நனைந்தபடி பாத்தி அமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியதில் சோலைராஜ் (31) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டார் மின்னல் தாக்கி உயிரிழந்த சோலைராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்வில், விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
(இதைத்தொடர்ந்து, பிள்ளையார்நத்தம் கிராம பொதுமக்கள் கனிமொழி எம்.பி.-யை முற்றுகையிட்டு முறையாக 100 நாள் வேலை வழங்கப்படுவதில்லை என்று ஆதங்கத்தோடு புகார் தெரிவித்தனர்... அதற்கு கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம்; "அது மத்திய அரசு திட்டம், அவர்கள் காசு கொடுக்க மாட்டிக்கீறார்கள்... பிஜேபிகாரங்க வந்தா கேளுங்க....!" என்று தெரிவித்துச் சென்றார்.)

உங்கள் கருத்தை பதிவிடுக