கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு மற்றும் மாற்றத்தை நோக்கி அமைப்பு சார்பில் சட்டம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஐந்தாவது தூண் அமைப்பின் நிறுவனத் தலைவர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு குருசாமி முன்னிலை வகித்தார். இதில் சதிஷ் குமார்,தீபக்ராஜா,குருசாமி , மதியழகன் ஆகியோர் தகவல் அறியும் உரிமைச் சட்டம், மனித உரிமை பாதுகாப்பு சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், ஊராட்சி சட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இதில் தொழிலதிபர் ராஜா மார்த்தாண்டம், கோவில்பட்டி சமூக ஆர்வலர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக