தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தலைவர் காளிராஜ் தலைமை தாங்கினார் ஆட்டோ ஓட்டுநர் சங்க உறுப்பினர் மாரிமுத்து ,மணி, முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்பாட்டத்தில் ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா தமிழக அரசு வழங்க வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்த ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும்,டீசல் மானியத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தினை ஏ.ஐ.டி.யு.சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பாலசிங் துவக்கி வைத்தார். ஆட்டோ ஓட்டுனர்களின் கோரிக்கைகளை விளக்கி கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் சேது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் , தாலுகா செயலாளர் சோலையப்பன் ஆகியோர் பேசினார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக