Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

சாத்தான்குளத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

Copied!
Nigazhvu News

வீட்டு மனைப் பட்டா, நிலப் பட்டா, முதியோர் ஓய்வூதியம், விதவைகள் ஓய்வூதியம், மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழ் நாடு அரசைக் கேட்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க வட்டக் கிளை சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது.




அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க சாத்தான்குளம் வட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார் .வட்ட துணைத்தலைவர் ஜெயபால் முன்னிலை வகித்தார்.. கோரிக்கைகளை விளக்கி வட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ,மாவட்ட துணைத்தலைவர் கந்தசாமி, தமிழ்நாடு விவசாய சங்க வட்டத் தலைவர் கிருஷ்ணன், வட்டச் செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சேசுமணி ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காந்திபுரி கிளைச் செயலாளர் கௌரி உட்பட பலர் கலந்து கொண்டனர் .அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க சாத்தான்குளம் வட்ட துணைச் செயலாளர் டேவிட் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்ட முடிவில் சாத்தான்குளம் தாசில்தாரிடம் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை பெருங்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் முற்றுகை

சாத்தான்குளம் அருகே கிராம மாணவர்கள் வசதிகாக அரசு பேருந்து இயக்கப்பட்டதையடுத்து ஊராட்சி தலைவர் தினேஷ் ராஜசிங் தலைமையில் ஊர் மக்கள் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்