Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை பெருங்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் முற்றுகை

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை பெருங்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் முற்றுகையிட்டு, பெருங்குளத்தில் மழைக்காலத்திற்கு முன்பாக விவசாயிகளுக்கு தேவையான வண்டல் மண்ணை டிப்பர் லாரிகளில் அள்ள அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் உத்தரையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி பாசன குளங்களில்  விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வண்டல் மண் அள்ள மாவட்ட நிர்வாகத்தினர் அனுமதி அளித்து வருகின்றனர்.


குறிப்பாக, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  தங்களது நிலங்களை சீரமைத்திட தேவையான வண்டல் மண் குளங்களில் இருந்து அள்ள வருவாய்த் துறையினரிடம் கோரிக்கை மனு அளிக்கின்றனர். இக்கோரிக்கையின் படி விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள குளங்களில் வண்டல் மண் அள்ள பொதுப்பணி துறையினர் அனுமதி சீட்டு வழங்குகின்றனர். இந்த அனுமதி சீட்டு மூலம் அள்ளப்படும் வண்டல் மண் விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறதா என்பதை தோட்டக்கலை துறையினர் கண்காணிக்கின்றனர். இந்நிலையில்,ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பா குளம் பெருங்குளம் இருவப்பபுரம் பகுதிகளில் விதிமுறைகளை மீறியும் உரிய அனுமதி இன்றியும் வண்டல் மண் அள்ளப்படுவதாக புகார் எழுந்தது. கடம்பா குளத்தில் இருந்து அள்ளப்பட்ட வண்டல் மண் செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்லப்படுவதை அறிந்த போலீசார் 27 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். இதனால், தற்காலிகமாக வண்டல் மண் அள்ள கொடுக்கப்பட்ட அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நீர்வளத் துறையினர் பெருங்குளம் மற்றும் சாயர்புரம் அருகே உள்ள இருவப்பபுரம் குளத்தில் வண்டல் மண் அள்ள இன்று அனுமதி அளித்துள்ளனர். இதில்,  பேய்குளம், இருவப்பபுரம் குளம், அகரம் குளம், நத்த குளம், நல்லூர் கீழகுளம், மேல புதுக்குடி குளம் ஆகிய குளங்களில் டிப்பர் லாரிகளில் வண்டல் மண் அள்ள அனுமதிக்கப்படுவதாகவும் பெருங்குளம் குளத்தில் அனுமதி மறுக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்து  ஸ்ரீவைகுண்டம் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை பெருங்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் சுடலை தலைமையில் விவசாயிகள் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.




உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம் விவசாயிகளின் குற்றச்சாட்டு குறித்து நேரடியாக பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார். அப்போது, மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெருங்குளம் குளத்தை சீரமைக்க நீர்வளத் துறையினர் உரிய அனுமதி வழங்காமல் மற்ற குளங்களில் விதிமுறைகளை மீறி டிப்பர் லாரி மூலம் மண் அள்ள அனுமதிப்பதாக கோஷமிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் போலீசார் விரைந்து வந்தனர்.  இதனைத் தொடர்ந்து, நீர்வளத் துறையினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி விவசாயிகள் கலைந்து சென்றனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கோவில்பட்டி புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற கோரி வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

சாத்தான்குளத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்