Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே ரோட்டோரமாக நின்று கொண்டிருந்தவர் மீது இருசக்கர வாகன மோதியதில் ஒருவர் பலி - ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் அருகே முப்பிலிவெட்டி வடக்கு தெருவை சேர்ந்த மாரிசெல்வம்  (34) என்பவருக்கு  செஷிதா மீனா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார் மேலும் மாரிச்செல்வம் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார் இந்நிலையில் மாரிச்செல்வம்  நேற்று இரவு ஓட்டப்பிடாரத்தில் இருந்து புதியம்புத்தூர் செல்லும் சாலையில் முப்பிலிவெட்டி செந்தூர்பாண்டி காம்ப்ளக்ஸ் அருகே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் முப்பிலிவெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன்  அமிர்தராஜ் (37) என்பவர் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரோட்டோரமாக நின்று கொண்டிருந்த மாரிச்செல்வம் மீது இருசக்கர வாகன மோதியதில் மாரி செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  அருகில் இருந்தவர்கள் மாரிச்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மாரிச்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார் சம்பவம் குறித்து மாரி செல்வம் மனைவி செஷீதா மீனா ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவம் குறித்து வழங்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடைபெறும் கொடூர தாக்குதலை நிறுத்த கோரியும் மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் - கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக இந்து முன்னணி சார்பில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்