கோவில்பட்டியில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி சிபிஐ கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மந்திதோப்பு கிராமத்தில் உள்ள துளசிங்க நகர், இந்திரா காலனி, கணேஷ் நகர், பகுதி மக்களுக்கு நீண்ட காலமாக குடியிருந்தும் வீட்டு மனை பட்டா கொடுக்கவில்லை. ஆனால் சில நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நத்தம் புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமை வைத்தார். கோவில்பட்டி நகரச் செயலாளர் சரோஜா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேது ராமலிங்கம், தாலுகா துணை செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், மாவட்ட குழு உறுப்பினர் ரஞ்சனி கண்ணம்மா, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நகர தலைவர் செந்தில் ஆறுமுகம், தலைமை குழு உறுப்பினர் ரெங்கராஜன், நகர குழு உறுப்பினர் சண்முகவேல், நகரத் துணைச் செயலாளர் அலாவுதீன் தாலுகா குழு உறுப்பினர் மணிகண்டன், சரவணன், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக